கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் 2024 மக்களவை தேர்தலுக்கான கூட்டணி வியூகத்தை வகுக்க எதிர்க்கட்சிகள் கூடியுள்ளன.
இதற்கிடையில் தேசிய ஜனநாயக கூட்டணியை புதுப்பிக்கும் முயற்சியில் பாரதிய ஜனதாவும் ஈடுபட்டுள்ளது.
தற்போது எதிர்க்கட்சிகள் இருக்கை ஒதுக்கீடு மற்றும் சீட் பகிர்வில் கவனம் செலுத்திவருகிறது. மறுபுறம் பாஜக கடந்த முறை தோல்வி அடைந்த தொகுதிகளில வெற்றி பெற கவனம் செலுத்துகிறது.
அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி எதிர்ககட்சி முகாமில் 24 கட்சிகளும், தேசிய ஜனநாயக கூட்டணியில்38 கட்சிகளும் உள்ளன.
எதிர்க்கட்சி
டெல்லி அவசர சட்டத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தால் மட்டும் கூட்டத்தில் பங்கேற்போம் என ஆம் ஆத்மி விதித்த நிபந்தனையை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டுள்ளது.
தொடர்ந்து, இரண்டு நாள்கள் கூட்டத்தில் ஆம் ஆத்மி கலந்துகொள்கிறது. மேலும் தமிழ்நாட்டின் திமுக, மதிமுக, உத்தரப் பிரதேசத்தின் அப்னா தள் (கமரேவாடி), ஒருங்கிணைந்த ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, உத்தவ் தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, இடதுசாரிகள், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
மம்தா பானர்ஜி தனது மருமகன் அபிஷேக் உடன் இதில் கலந்துகொள்கிறார். காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், எதிர்க்கட்சிகள் கூட்டப்பட்ட அதே நாளில் NDA கூட்டத்தை கேலி செய்தார்.
அப்போது அவர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு புத்துயிர் கொடுக்க முயற்சிகள் நடைபெறுகின்றன” என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணி
தேசிய ஜனநாயக கூட்டணியில் 38 கட்சிகள் உள்ளன. அதில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா, சிராக் பஸ்வானின் எல்ஜேபி,அதிமுக, லோக் ஜன சக்தி, அனு பிரியா பட்டேலின் அபர்னா தல், தமிழ் மாநில காங்கிரஸ், பவன் கல்யாணின் ஜன சேனா, ஜார்க்கண்டின் அனைத்திந்திய மாணவர்கள் சங்கம் உள்ளிட்ட 38 கட்சிகள் உள்ளன.
இதற்கிடையில், சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் (SBSP) தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், NDA கூட்டத்தில் சேருவதற்கு நட்டாவிடம் இருந்து இதுவரை எந்த கடிதமும் வரவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். இருப்பினும், அக்கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளதாகவும், 2024 மக்களவைத் தேர்தலில் கூட்டணியின் ஒரு பகுதியாக போட்டியிடப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.