2ஜி மேல்முறையீடு வழக்கு; அக். 5 முதல் தினமும் விசாரணை

அதன்படி, அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தினமும் 2 ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்தது. 

கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் விடுதலை செய்தது தொடர்பான 2 ஜி மேல்முறையீடு வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சிபிஐ, அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்பதாக அறிவித்தது.

அதன்படி, அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தினமும் 2 ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்தது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் அனைவரையும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்  விடுதலை செய்வதாக 2017ம் ஆண்டு அறிவித்தது.

இதையடுத்து, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தன.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வரும் நீதிபதி பிரஜேஷ் வரும் நவம்பர் மாதம் 30ஆம் தேதி ஓய்வு பெறுவதால் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் முறையிடப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு காலகட்டங்களில் மேல்முறையீடு வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இன்னும் இறுதி வாதங்கள் எட்டப்படாத நிலையில் தற்போது வழக்கின் விசாரணை தீவிரமாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 2g case delhi highcourt allows early hearing 2g case day to day hearing from october 5

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com