Advertisment

இடைவிடாது மணி ஒலித்த கனிமொழி செல்ஃபோன்: பிரியாணி வாங்கிதந்த ஆ.ராசா

2 ஜி வழக்கில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரை விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.ஷைனி தீர்ப்பளித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Election 2019 live updates

Election 2019 live updates : பிரச்சாரத்தில் விளாசும் கனிமொழி

2 ஜி வழக்கில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரை விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.ஷைனி தீர்ப்பளித்தார். அன்றைய தினம், டெல்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றன. அவற்றில் சில.

Advertisment

- வழக்கிலிருந்து விடுதலையான உடனேயே திமுக எம்.பி. கனிமொழிக்கு முக்கிய தலைவர்கள் செல்ஃபோனில் தொடர்புகொண்ட வண்ணம் இருந்தனர். முக்கியமாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், சரத்பவாரின் மகளும் தேசியவாத காங்கிரஸ் எம்.பி.யுமான சுப்ரியா சுலே, திமுக செயல் தலைவர் https://www.ietamil.com/மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், ராஜ்யசபாவில் காங்கிரஸ் துணைத்தலைவர் ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் கனிமொழியை தொடர்புகொண்டனர்.

- ஆ.ராசா தன் ஆதரவாளர்கள் 500 பேருக்கு பிரியாணி வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இடையே, “ஆயிரம் பேருக்கு பிரியாணி ஆர்டர் செய்திருக்கலாம்”, என தன் ஆதரவாளர் ராஜ்குமார் என்பவரை ஆ.ராசா கடிந்தும்கொண்டார்.

- செல்ஃபோனில் தமிழில் ‘நன்றி, நன்றி’ என்ற வார்த்தையையே ஆ.ராசா அதிகமாக பேசினார்.

publive-image

- தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த திமுக ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பலரும் ஆ.ராசாவின் சொந்த மாவட்டமான பெரம்பலூரிலிருந்து வந்திருந்தனர். தவிர, அரியலூர், கன்னியாகுமரி, மேட்டுபாளையம் பகுதிகளிலிருந்தும் வருகை புரிந்தனர்.

publive-image

-குல்மோஹர் பார்க்கில் அமைந்துள்ள ஆ.ராசாவின் வீட்டின்முன்பு, தமிழ், ஆங்கிலம், இந்தி மொழி ஊடகவியலாளர்கள் நிறைந்திருந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த வீட்டில்தான் ஆ.ராசா குடும்பத்துடன் வசிப்பதாக தெரிவித்த காவலாளி ஒருவர், இத்தனை பெரும் கூட்டம் இப்போதுதான் திரண்டிருப்பதாக கூறினார்.

- தீர்ப்பு நாளன்று சென்னையிலிருந்து கனிமொழியின் தாய் ராஜாத்தி அம்மாள் மற்றும் சிங்கப்பூரிலிருந்து கணவர் அரவிந்தன் ஆகியோர் டெல்லி வந்திருந்தனர். அவர்களுடன் காலை உணவு முடித்துவிட்டுதான் கனிமொழி நீதிமன்றத்திற்கு வந்தார்.

publive-image

- பதட்டம், கொண்டாட்டம் முடிந்து அன்றைய தினம் கனிமொழி தன் குடும்பத்தினருடன் இரவு உணவு உண்டார்.

A Raja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment