Advertisment

3 நாட்களில் பஞ்சாப் வாக்குப்பதிவு; தேர்தல் அறிக்கையை வெளியிடாத காங்கிரஸ்; கட்சியினர் அதிருப்தி

பஞ்சாப் வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் அறிக்கையை வெளியிடாத காங்கிரஸ்; கட்சி தலைவர்கள் அதிருப்தி

author-image
WebDesk
New Update
3 நாட்களில் பஞ்சாப் வாக்குப்பதிவு; தேர்தல் அறிக்கையை வெளியிடாத காங்கிரஸ்; கட்சியினர் அதிருப்தி

Anju Agnihotri Chaba 

Advertisment

3 days to go, Congress insiders irked at party not releasing poll manifesto yet: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. இந்த தாமதம் குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் கவலையடைந்துள்ள நிலையில், தேர்தல் அறிக்கை வியாழக்கிழமை ஆன்லைனில் வெளியிடப்படலாம் என்று தேர்தல் அறிக்கையின் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். பிப்ரவரி 20-ம் தேதி மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வெள்ளிக்கிழமையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.

பெயர் வெளியிட விரும்பாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், “அவர்கள் எதற்காக காத்திருக்கிறார்கள்? தேர்தல் அறிக்கைக்காக குழு ஏன் அமைக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பினார்.

மற்றொரு தலைவர், “அவர்களுக்கு தெளிவான தொலைநோக்கு பார்வை இல்லை, அறிவிப்புகள் மட்டுமே வெளியாகி வருகிறது. அவர்கள் தங்கள் உள் சண்டைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள் என்று கூறினார்.

மேலும், "சித்து தனது சொந்த மாதிரிகளை வழங்குகிறார், சன்னி (முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி) தனது சொந்த இலவசங்களை அறிவிக்கிறார், ஆனால் இவை அனைத்தும் அறிக்கை என்ற முறையான ஆவணத்தில் சேர்க்கப்பட வேண்டும்." என்றும் அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்: ‘பையாஸ்’ என்று பேசிய பஞ்சாப் முதல்வர்; உற்சாக பிரியங்கா: பா.ஜ.க, ஆம் ஆத்மி கண்டனம்

தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி மக்களிடம் ஆட்சிக்கு எதிரான மனநிலையையும் மற்றும் போட்டியாளர்களிடம் கடும் போட்டியை எதிர்கொண்டுள்ள நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் அவர்களின் சொந்த தொகுதிகளில் பிரசாரம் செய்வதிலும், மக்களை கவரும் திட்டங்களை அறிவிப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவர் எம்பி பர்தாப் சிங் பஜ்வா இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் வியாழன் அன்று பேசுகையில், “ஆம், கட்சி இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை, முதலில் இன்று (வியாழக்கிழமை) ஆன்லைனில் வெளியிடலாம், பின்னர் அச்சு பதிப்பு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியால் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

பாஜ்வா மேலும் கூறுகையில், “தேர்தல் அறிக்கையின் முறையான வெளியீட்டிற்கு சண்டிகருக்கு இன்று (வியாழன்) வருமாறு அவர்கள் என்னிடம் சொன்னார்கள், ஆனால் பிரச்சார காலம் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைவதால், நான் எனது சொந்த தொகுதியில் மிகவும் பிஸியாக இருக்கிறேன், மேலும் சண்டிகருக்குச் செல்ல நேரத்தை ஒதுக்க முடியவில்லை." என்று கூறினார்.

கடந்த மாதம், பாஜ்வா மற்றும் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் தேர்தல் அறிக்கை பற்றி விவாதிக்க ஜலந்தரில் ஒரு கூட்டத்தை நடத்தினர், ஆனால் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில், அவர்கள் சித்துவின் மிகவும் பரிந்துரைக்கப்பட்ட 'பஞ்சாப் மாடல்' பற்றி மட்டுமே விவாதித்தனர், இது மாநிலத்தின் முழு சூழ்நிலையையும் மாற்றும் என்று அவர்கள் கூறினர்.

பாஜ்வாவும் சித்துவின் 13 அம்ச சாசனத்தை ஆதரித்தது, இந்த வாக்குறுதிகள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஒரு பகுதியாக இருக்கும் என்று கூறினார்.

ஜிதேகா பஞ்சாப் கமிஷன் அமைப்பதற்காகவும் சித்து தனது மாடலில் குறிப்பிட்டு இருந்தார். இந்த ஆணையம், அரசாங்கத்தின் மனதாக இருக்கும் என்றும், அரசின் ஒவ்வொரு துறைக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் ஆலோசனை வழங்கும் "முதன்மை கொள்கை ஆலோசனை" மற்றும் "சிந்தனைக் குழுவாக" செயல்படும் என்றும் அவர் கூறினார். ‘பஞ்சாப் மாடல்’ முறையில் பஞ்சாப் சட்டசபையை குறைந்தது 100 நாட்கள் நடத்துவதாகவும் சித்து உறுதியளித்தார்.

அதிகாரப் பரவலாக்கம், பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம், முனிசிபல் கமிட்டிகளுக்கு அதிகாரம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், பருப்பு வகைகள், எண்ணெய்கள் போன்றவற்றில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல விஷயங்களை பாஜ்வாவுடன் இணைந்து பஞ்சாப் மாதிரியின் பல விஷயங்களை சித்து வெளியிட்டார். தொழிலாளர் வர்க்கத்திற்கான உரிமைகள், தொழில்களின் மேம்பாடு, கல்லூரியில் சேரும் பெண்களுக்கான இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற NRIகளுக்கான தொலைநோக்கு பார்வை ஆகியவையும் சித்துவின் சாசனத்தின் ஒரு பகுதியாகும்.

மதுபானம், மணல், கேபிள் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் கொள்கைகளை உருவாக்குவதன் மூலம் பஞ்சாபின் வருமானத்தை பன்மடங்கு உயர்த்துவதற்கான தனது பார்வையையும் சித்து வெளியிட்டார்.

இதற்கிடையில், கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், சன்னி பல இலவசங்களை அறிவித்தார், அவை அறிக்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், ஆனால் அவை இன்னும் முறையான ஆவணமாக மாறவில்லை என்றார்.

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,100, மின்விலை யூனிட்டுக்கு ரூ.3 ஆகவும், மணல் விலை கனஅடிக்கு ரூ.4 ஆகவும், கேபிள் கட்டணத்தை மாதம் ரூ.100 ஆகவும் நிர்ணயிப்பது, ஓராண்டில் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் வேலை வாய்ப்பு, மாணவர்களுக்கு இலவச மொபைல் டேட்டா, ஆண்டுக்கு எட்டு இலவச எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்டவை சன்னியின் இலவச அறிவிப்புகள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Punjab Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment