3 Jammu Kashmir Photojournalists win Pulitzer prize for photography : ஒவ்வொரு ஆண்டும் பத்திரிக்கை துறையில் சிறப்பு பெற்று விளங்கும் பத்திரிக்கையாளர்களுக்கு அமெரிக்க பத்திரிக்கையாளர் ஜோசப் புலிட்சர் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க : டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு… அறிக்கை வெளியிட்டது தமிழக அரசு!
பத்திரிக்கை, நாடகம், இசை, இலக்கியம் உள்ளிட்ட 23 துறைகளில் புலிட்சர் விருதுகள் வழங்கப்படும். அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் நகரை அடிப்படையாக கொண்டு செயல்படும் கொலம்பியா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் போட்டியாளர்களிடம் இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்கிறது.
Congratulations to Channi Anand, Mukhtar Khan and @daryasin of @AP. #Pulitzer pic.twitter.com/SJzGyK3sXq
— The Pulitzer Prizes (@PulitzerPrizes) May 4, 2020
இம்முறை ஜம்மு காஷ்மீரின் ஏ.பி. பத்திரிக்கை நிறுவனத்தில் (Associated Press) பணியாற்றும் முக்தர் கான், சன்னி ஆனந்த், மற்றும் தர் யாசின் ஆகியோருக்கு புலிட்சர் விருதுகள் கிடைத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
புலிட்சர் விருதுகளுக்காக அனுப்பப்பட்ட புகைப்படங்கள் ஒரு பார்வை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி, ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் ஊரடங்கு காலங்களிலும், காஷ்மீரின் இயல்பு வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் இந்த மூன்று புகைப்படக்கலைஞர்கள் எடுத்த புகைப்படங்களுக்கு தற்போது விருது வழங்கப்பட்டுள்ளது என கொலம்பியா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
இந்த விருதுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மூன்று பத்திரிக்கையாளர்களும் தங்களின் குடும்பத்தினரோடு இந்த மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடினார்கள்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த புலிட்சர் விருது வழங்கும் நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டது.
திட்டமிட்டபடி விருதுகள் வழங்கப்பட்டிருந்தால், இந்நிகழ்வும் இரண்டு வாரங்களுக்கு முன்பே நடந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பத்திரிக்கையாளர்களுக்கு நாமும் நம்முடைய வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வோம்.
எல்லை கட்டுப்பாட்டு ராணுவத்துறையை சேர்ந்த ராணுவர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
ஊரடங்கிற்கு பிறகான ஜம்மு காஷ்மீரின் நிலை.
கீழே இருக்கும் இந்த இரண்டு புகைப்படங்களும் புகைப்பட கலைஞர் தர் யாசினால் எடுக்கப்பட்டது. இந்த புகைப்பட சீரிஸில் மிகவும் சக்திவாய்ந்த புகைப்படங்களாக இந்த இரண்டு புகைப்படங்களும் கருதப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.