புதிய ஆளுநர் பெற்ற 3 மாநிலம்… 4 மாநில ஆளுநர் இடமாற்றம்:
வட இந்தியாவின் பீகார், ஹரியானா மற்றும் உத்தரகாண்டு ஆகிய பகுதிகளுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநில ஆளுநராக லால் ஜி டாண்ட், ஹரியானா ஆளுநராக சத்யதேவ் நாராயண் ஆர்யா மற்றும் உத்தரகாண்டு ஆளுநராக பேபி ராணி மவுரியா நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் ஆளுநராக உள்ள சத்யபால் மாலிக், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மேகாலயா ஆளுநராக உள்ள கங்கா பிரசாத், சிக்கிம் ஆளுநராகவும், திரிபுரா ஆளுநராக செயல்பட்டு வரும் தத்தகதா ராய், மேகாலயா ஆளுநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஹரியானா ஆளுநராக செயல்பட்டு வரும் கப்தன் சிங் சோலங்கி-யை, திரிபுரா மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். இந்த உத்தரவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்.