டெல்லியின் ராஜிந்தர் நகர் பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ள நீர் புகுந்ததில் வெள்ளத்தில் சிக்கி 3 யு.பி.எஸ்.சி மாணவர்கள் உயிரிழந்தனர். வெள்ளத்தில் சிக்கிய 2 மாணவியர் மற்றும் ஒரு மாணவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
டெல்லி அமைச்சர் அதிஷி சம்பவ இடத்தில் நிலவரத்தை ஆய்வு செய்து, சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் மழை பெய்தது. சனிக்கிழமை மாலை 7 மணியளவில், ராவ் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் ( Rau’s IAS Study Circle) அடித்தளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக டெல்லி தீயணைப்பு துறைக்கு அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து 5 தீயணைப்பு வாகனங்கள் அங்கு சென்றன. வெள்ளத்தில் மாணவர்கள் சிக்கிய நிலையில் அவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டு வந்தனர்.
இருப்பினும் வெள்ளத்தில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழந்தனர். 2 மாணவிகள், ஒரு மாணவரின் உடல்கள் மீட்கப்பட்டன. இரவு 10:30 மணி, 11:20 மணியளவில் 2 மாணவிகள் உடல்கள் மீட்கப்பட்டன. வெள்ளத்தில் சிக்கிய 3-வது நபரைத் தேடும் பணி இன்னும் நடந்து வருகிறது.
சனிக்கிழமை இரவு, வெள்ளம் ஏற்பட்ட போது அங்கிருந்த மாணவர்கள் கூறுகையில், அடித்தளத்தில் பயிற்சி மையத்தின் நூலகம் உள்ளது. அங்கு மாணவர்கள் எப்போதும் படிக்க செல்வர்.இந்நிலையில் நேற்று திடீரென வெள்ளம் ஏற்பட்டு அடித்தளத்தில் கிட்டத்தட்ட 10-12 அடி தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மாணவர்கள் அங்கிருந்து வெளியேற முடியவில்லை என்றனர்.
வானிலைத் துறையின் புசா வானிலை நிலையம், நேற்று பழைய ராஜிந்தர் நகர் பகுதிகளில், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை 31.5 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மையத்தில் வெள்ளம் வந்த உடன், மாணவர்களை வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது, 112-க்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக மீட்புப் பணியாளர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதாக பயிற்சி மையத்தில் பணிபுரியும் ஆசிரியர் கூறினார்.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீது பா.ஜ.க கடுமையான குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. இது அப்பகுதி சட்டமன்ற உறுப்பினரின் அக்கறையின்மையால் நிகழ்ந்ததாக குற்றம் சாட்டியது.
ஆம் ஆத்மி கட்சியின் ராஜிந்தர் நகர் எம்.எல்.ஏ.வான துர்கேஷ் பதக் கூறும்போது, “ஓர் இடத்தில் வடிகால் உடைந்ததால் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. தண்ணீரை அகற்ற பம்புகள் வைக்கப்பட்டுள்ளன. வடிகால் அகற்றப்படாமல் இருந்திருந்தால், மற்ற கட்டிடங்களிலும் தண்ணீர் தேங்கியிருக்கும், ஆனால் இப்போது ஒரே ஒரு இடத்தில் தண்ணீர் தேங்கியது. ஒரு கட்டிடத்தின் அடித்தளம் மட்டுமே நீரில் மூழ்கியுள்ளது என்றார்.
ஆங்கிலத்தில் படிக்க: 3 UPSC aspirants dead as coaching centre’s basement is flooded in Delhi’s Rajinder Nagar
வடிகால்களில் நீர் தேங்குவதும், தூர்வாருவதும் தலைநகரில் ஒரு அரசியல் ஃப்ளாஷ் புள்ளியாக இருந்து வருகிறது, ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் பொதுப்பணித் துறை மற்றும் டெல்லி மாநகராட்சி இதற்கு போதுமான அளவு நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சியான பா.ஜ.க அடிக்கடி குற்றம் சாட்டு வருகிறது.
சனிக்கிழமை நடந்த சம்பவம் குறித்து 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தலைமைச் செயலாளருக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் அதிஷி உத்தரவிட்டுள்ளார். “இந்த சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதை உடனடியாக செய்வோம் '' என்று அதிஷி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.