/indian-express-tamil/media/media_files/2025/09/22/pak-2025-09-22-17-56-03.jpg)
Tirah Valley Attack in Pakistan
PAF attack on Khyber Pakhtunkhwa: பாகிஸ்தான் விமானப் படை இன்று அதிகாலை 2 மணியளவில் ஜே.எஃப்-17 போர் விமானங்கள் மூலம் எல்.எஸ்-6 வகையைச் சேர்ந்த குண்டுகளை மக்கள் அதிகமாக உள்ள மாட்ரோ தாரா கிராமத்தில் வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பலர் காயமடைந்த நிலையில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த தாக்குதலால் கிராமத்தின் பெரும்பகுதி அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் உள்ள தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் மறைவிடங்களை குறிவைத்து விமானப்படை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இந்தத் தாக்குதலில் உயிரிழந்த அனைவரும் பொதுமக்கள் என்று கூறப்படுகிறது. சமீபத்திய நாட்களில், ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உளவுத்துறை அடிப்படையிலான தேடுதல் நடவடிக்கையின் போது ஏழு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் அறிவித்தது.
செப்டம்பர் 13-14 அன்று, கைபர் பக்துன்வாவில் நடந்த இரண்டு தனித்தனி மோதல்களில் 31 தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
 
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us