41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை நோக்கி படையெடுக்கும் 30 பெண்கள்.. கேரளாவில் அடுத்தக்கட்ட பரபரப்பு!

கடவுளை தரிசப்பதில் ஆண்கள், பெண்கள் என பாகுபாடு ஏன்? 

கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்கு வரும் 23 ஆம் தேதி, சென்னையை சேர்ந்த 30 பெண்கள் செல்ல இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் அனைவரும் ஆண்களை போலவே 41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வதாக தகவல்கள் பரவி வருகின்றன.

கேரளாவுக்கு செல்லும் 30 பெண்கள்:

சபரிமலை கோயிலில் பெண்கள் செல்லலாமா? கூடாதா?  என்று ஆண்டாண்டு  காலமாக இருந்து வந்த  விவாதம், சமீபத்தில்   வெளியான தீர்புக்கு பின்பு சபரிமலை கோயிலுக்கு பெண்கள் செல்வது சரியா? தவறா? என மாறிவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து கேரள அரசு அதை அமல்படுத்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதே நேரத்தில் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், இந்து அமைப்புகளும் ஐயப்ப பக்தர்களும் சபரிமலை  முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும்  பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில்  சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு வருகிறது.  நடை திறக்கப்படும் போது பல மாநிலங்களில் இருந்தும் பெண்கள்  உள்ளே செல்ல முயன்றும் வருகின்றனர். சிலர் தடுப்பு நிறுத்தப்படுகின்றனர், சிலர் காவல் துறையின் உதவியுடன்  தரிசனனும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,  வரும் டிசம்பர் 24 ஆம் தேதி  ‘மனிதி’ எனும் சமூக நல அமைப்பு சார்பில் 0 பெண்கள் அடங்கிய குழு  சென்னையில் இருந்து சபரிமலை செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுக் குறித்த அறிவிப்பை ‘மனிதி’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான செல்வி தெரிவித்துள்ளார். 30 முதல் 40 வயதுடைய பெண்கள் சபரிமலை கோயிலுக்குச் செல்ல விரும்புவதாகவும் அதற்கு வேண்டிய பாதுகாப்பு வழங்குமாறும் கேரள மாநில அரசிடம் செல்வி கோரி்க்கையும் விடுத்துள்ளார்.

இதுக் குறித்து பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு செல்வி அளித்துள்ள பேட்டி, “சபரிமலைக்குள் பெண்கள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நாங்கள் முற்றிலும் வரவேற்கிறோம்.

ஐயப்பனை காணவேண்டும், தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கும் உண்டு. கடவுளை தரிசப்பதில் ஆண்கள், பெண்கள் என பாகுபாடு ஏன்? எங்களின் வழிபாட்டு உரிமையை யாரலும் தடுத்து நிறுத்த முடியாது.

இப்போது சபரிமலைக்குள் பெண்கள் செல்வதற்கு பல்வேறு தரப்பினர் முட்டுக்கட்டையாக இருப்பதாக தெரிகிறது. ஆனால் கேரளா காவலர்கள் தான் எங்களுக்கு உதவ வேண்டும்.

வரும் 23 ஆம் தேதி  சபரிமலை செல்லும் 30 பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குப்படி அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் மின்னஞ்சல் மூலம் கேட்டோம்.

அவரும் எல்லா வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து தருவதாக பதில் கடிதம் மூலம் உறுதி அளித்திருக்கிறார். எனவே திட்டமிட்டபடி எங்கள் பயணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.

ஆண் பக்தர்களைப் போல் நாங்கள் 41 நாட்கள் விரதமிருந்து ஐய்யப்பன் கோயிலுக்குச் செல்ல விரும்புகிறோம். சென்னையில் இருந்து 22-ந் தேதி புறப்பட்டு மறுநாள் காலை 10 மணியளவில் கேரளா மாநிலம் கோட்டயத்தில் கூடுகிறோம்.

தீர்ப்புக்கு பின்பு கேரளாவில் ஒவ்வொரு நாளும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சென்னையிலிருந்து 30 பெண்கள் ஒரே நேரத்தில் சபரிமலை செல்வது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close