"திரௌபதிதான் உலகின் முதல் பெண்ணியவாதி”, என பாஜக தலைவர் ஒருவர் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் கேலிக்கு உள்ளாகியுள்ளது.
பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “திரௌபதிதான் உலகின் முதல் பெண்ணியவாதி. திரௌபதிக்கு ஐந்து கணவர்கள். அந்த 5 பேரின் பேச்சையும் திரௌபதி கேட்கமாட்டார். ஆனால், தனது நண்பர் கிருஷ்ணாவின் பேச்சைதான் திரௌபதி கேட்பார். ஆனால், அவரை நாம் வரைமுறையற்றவர் என அழைத்ததில்லை”, என கூறியிருக்கிறார்.
அவரது இந்த பேச்சை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.