வனக் குழு 8-மணிநேர ஆபரேஷனைத் தொடங்கியது, தண்ணீர் நிறைந்த குகையில் உணவு இல்லாமல் எங்கும் செல்ல முடியாமல் பட்டினி கிடந்த குடும்பத்தை மீட்டது.
செவ்வாயன்று வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகள் முழு கிராமங்களையும் அழித்த பிறகு, இதில் சிக்கி இருந்த மனித உயிரை காப்பாற்றும் மாநிலத்தின் முயற்சிகளுக்கு சான்றாக, மீட்கப்பட்ட குழந்தையை மார்போடு நெருக்கமாக வைத்திருக்கும் வன அதிகாரியின் படம் கேரளாவில் வெளிவந்துள்ளது.
புகைப்படத்தில் மெலிந்து திகிலுடன் காணப்படும் குழந்தை, 6 பேர் கொண்ட பழங்குடியினக் குடும்பத்தைச் சேர்ந்தவர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அட்டமலைக்கு அருகில் உள்ள சூச்சிப்பாரா நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே உள்ள ஒரு குகையில் சிச்கி கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஐந்து வயதுக்குட்பட்ட 4 குழந்தைகள் உட்பட குடும்பத்தைக் காப்பாற்ற வனத் துறைக் குழுவிற்கு எட்டு மணிநேரம் துணிச்சலான மீட்பு தேவைப்பட்டது.
அதிகாரப்பூர்வமாக 219 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், 200 பேரைக் காணவில்லை என்றாலும், இந்த மீட்பு நம்பிக்கையின் ஒளியாக வெளிப்பட்டுள்ளது.
கல்பெட்டா வன வரம்பு அதிகாரி கே.ஆஷிப் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், பாறைகளை கடந்து செல்லவும், குடும்பத்தை மீட்கவும் இந்த பணி தேவைப்பட்டது. ஆஷிப் உடன் பிரிவு வன அலுவலர் ஜெயச்சந்திரன், பீட் வன அலுவலர் கே.அனில் குமார், வன விரைவு நடவடிக்கை குழு உறுப்பினர் அனூப் தாமஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் மீட்புக் குழுவில் இருந்தனர்.
மீட்கப்பட்ட குடும்பத்தினர் - கிருஷ்ணன், அவரது மனைவி சாந்தா மற்றும் அவர்களது குழந்தைகள் - இப்போது அட்டமலையில் உள்ள வனத் துறை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட முதல் நாளில், மீட்புக் குழுக்கள் சூரல்மாலாவில் ஆற்றின் குறுக்கே கயிறு பாதையை அமைத்த பிறகு, ஜெயச்சந்திரனுடன் அட்டமாலாவில் உள்ள பழங்குடியினர் காலனியில் வசிப்பவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைச் சரிபார்க்க மறுபுறம் சென்றதாக ஆஷிப் கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: Behind defining image of Wayanad rescue efforts: 4 forest officers, a tribal family, a daring rescue
“அட்டமலை மற்றும் முண்டக்காய் பகுதிகளில் இருந்து காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் உடலை அழைத்து வருவதற்காக இந்த கயிறு அமைக்கப்பட்டது. அட்டமலாவில் உள்ள காலனியை அடைந்ததும், ஐந்து வயது சிறுவனுடன் சாந்தா இருப்பதைக் கண்டோம். மற்ற பெண்கள் காலனியில் இருந்து (சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு குகையில்) இருந்தனர். அன்று மாலையே நாங்கள் சூரல்மாலா திரும்பினோம்,” என்றார்.
புதனன்று, வனத்துறையினர் அட்டமலாவில் உள்ள பழங்குடியினர் காலனியில் குடியிருப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக வசிப்பவர்களை இடமாற்றம் செய்தனர்.
வியாழனன்று, யாரேனும் விட்டுச் சென்றிருக்கிறார்களா என்று மதிப்பிடுவதற்காக குழு திரும்பியபோது, ஜெயச்சந்திரன் காட்டில் சோர்வுடன் அலைந்து திரிந்த பெண்ணைக் கண்டார். அவர் 5 வயது குழந்தையுடன் இருந்தார்.
“ஆரம்பத்தில், அவர் எங்களிடம் பேச தயங்கினார். வழக்கமாக, அவர் அரிசி விநியோகத்தைப் பெற பழங்குடி குடியிருப்புக்கு வந்து, கீழே உள்ள ஒரு குகையில் தக்குகிறவர்கள். அவரும், அவளுடைய குழந்தையும் பட்டினியால் வாடுவதை அறிந்ததும், நாங்கள் அவர்களுக்கு பிஸ்கட் மற்றும் தண்ணீர் கொடுத்தோம். அதன்பிறகுதான் அவர் தனது கணவர் மற்றும் பட்டினியால் வாடும் மூன்று குழந்தைகளைப் பற்றி வெளிப்படுத்தினார், அவரின் இளைய குழந்தைக்கு ஒரு வயது.
அந்த பெண்ணையும் குழந்தையையும் தங்களுடைய வனப்பகுதியில் தங்கவைத்த பிறகு, நான்கு வன அதிகாரிகள் நான்கு கிலோமீட்டர் தூரம் நிலப்பரப்பு வழியாக தந்தையையும் மூன்று குழந்தைகளையும் சென்றடைந்ததாக ஆஷிப் கூறினார். குழுவினர் ஒரு போர்வை, சில பிஸ்கட் பாக்கெட்கள் மற்றும் கயிறு ஆகியவற்றைக் கொண்டு சென்றனர்.
கயிற்றைப் பயன்படுத்தி, குழு வழுக்கும் பாறைகளை ஏறி குகையை அடைந்தது. “அதில் தண்ணீர் நிரம்பியிருந்தது. நாங்கள் அவர்களைக் கண்டபோது, குழந்தைகளும் கிருஷ்ணனும் அருகில் கட்டப்பட்டிருந்த தாளின் கீழ் நின்றிருந்தனர். அவர்கள் எங்களுடன் வரமாட்டார்கள் என்று நாங்கள் பயந்தோம், ஆனால் நிலைமையின் தீவிரம் மற்றும் அங்கு தங்குவதற்கான ஆபத்தை நாங்கள் விளக்கியபோது, கிருஷ்ணன் எங்களைப் பின்தொடர ஒப்புக்கொண்டார், ”என்று ரேஞ்ச் அதிகாரி கூறினார்.
போர்வையைக் கிழித்து, தொட்டில் தயாரிக்கப்பட்டது, அதில் ஒரு நேரத்தில் ஒரு குழந்தையை அழைத்து செல்ல முடியும். இதையடுத்து வனத்துறையினர் குழந்தைகளை ஒன்றன் பின் ஒன்றாக சுமந்து கொண்டு பாறையின் மீது ஏறினோம் என்றார்.
"இது மிகவும் ஆபத்தானதாக இருந்தது- தவறினால் நாங்கள் 100 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்துவிடுவோம். முகாமிற்குத் திரும்பிச் செல்லும்போது, நாங்கள் மாறி மாறிக் குழந்தைகளை தொட்டில்களில் சுமந்து சென்றோம். அவர்களை மீண்டும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வர நாங்கள் ஒரு நாள் முழுவதும் உழைக்க வேண்டியிருந்தது” என்றார் ஜெயச்சந்திரன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.