நிஜ்ஜார் கொலை வழக்கில் 4-வது இந்தியர் கைது: கனடாவில் படித்து வரும் பஞ்சாப் மாணவர்
காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை வழக்கு; கனடாவில் படித்து வரும் பஞ்சாபைச் சேர்ந்த மாணவர் கைது; ஏற்கனவே 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 4 ஆவது இந்தியர் கைது
கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே காலிஸ்தானி பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் நான்காவது இந்திய பிரஜையை கனடா போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் ஒருங்கிணைந்த கொலை விசாரணைக் குழுவின் (IHIT) கூற்றுப்படி, 22 வயதான அமந்தீப் சிங், தொடர்பில்லாத துப்பாக்கி சூடு குற்றச்சாட்டுகளுக்காக ஒன்டாரியோவில் பீல் பிராந்திய போலிஸ் காவலில் ஏற்கனவே இருந்தார்.
அமன்தீப் சிங் மீது முதல் நிலை கொலை மற்றும் கொலை சதி செய்ததாக பிரிட்டிஷ் கொலம்பியா வழக்கு விசாரணை சேவை குற்றம் சாட்டியது, தங்களின் விசாரணைக்கு போதிய ஆதாரங்களை கொண்டு சென்றதாக ஐ.ஹெச்.ஐ.டி அறிக்கை கூறியதாக கனடியன் பிரஸ் தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர், இந்தியப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார், பிராம்ப்டன், ஒன்டாரியோ, சர்ரே மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்ட் ஆகிய இடங்களில் வசித்து வந்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் காரணமாக, கைது தொடர்பான கூடுதல் விவரங்களை தற்போது வெளியிட முடியாது என ஐ.ஹெச்.ஐ.டி தெரிவித்துள்ளது.
முன்னதாக கைது செய்யப்பட்டவர்களில், எட்மண்டனில் கைது செய்யப்பட்டு, நிஜ்ஜாரின் மரணத்தில் முதல் நிலை கொலை மற்றும் கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கரன் ப்ரார், கமல்ப்ரீத் சிங் மற்றும் கரன்ப்ரீத் சிங் ஆகிய மூன்று இந்திய பிரஜைகளும் அடங்குவர்
இந்தச் சம்பவங்கள் கனடாவின் சர்வதேச மாணவர் அனுமதிச் செயல்முறையை ஆய்வு செய்யத் தூண்டியுள்ளன, குறிப்பாக 2019 இல் இந்தியாவைச் சேர்ந்த குடியேற்ற ஆலோசனை நிறுவனத்தால் வெளியிடப்பட்ட கரன் பிரார் இடம்பெறும் வீடியோ தொடர்பான வெளிப்பாடுகளுக்குப் பிறகு அதிக கவனம் பெற்றுள்ளது. வீடியோவில், அவரது படிப்பு விசாவின் வருகையைக் குறிக்கும் வகையில் ஒரு புகைப்படத்துடன் கூடிய ஒரு படிப்பு அனுமதி காட்டப்பட்டது.
சந்தேக நபர்களின் குடிவரவு நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, கனடாவின் புலம்பெயர்வு, அகதிகள் மற்றும் குடியுரிமை துறை, நடந்துகொண்டிருக்கும் விசாரணைகள் மற்றும் தனிப்பட்ட வழக்குகளின் இரகசியத்தன்மையை மேற்கோள் காட்டி கருத்து தெரிவிப்பதைத் தவிர்த்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“