Advertisment

ஊரடங்கிலும் படு ஜோராக விற்றுத் தீர்ந்த பிரியாணி; ஸ்விக்கியின் ”சாப்பாட்டு” சர்வே!

323 மில்லியன் கிலோ வெங்காயம், 56 மில்லியன் கிலோ வாழைப்பழம், 3,50,000 நூடுல்ஸ் பாக்கெட்டுகளையும் ஊரடங்கு காலத்தில் டெலிவரி செய்திருக்கிறது ஸ்விக்கி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
5.5 lakh biryanis, 1.2 lakh cakes ordered during COVID-19 lockdown, reveals survey

5.5 lakh biryanis, 1.2 lakh cakes ordered during COVID-19 lockdown : கொரோனா ஊரடங்கின் போதும் கூட பிரியாணிக்காகவே உயிர்வாழ்ந்த நம் மக்களை பார்த்து நீயும் என் இனமடா என்று தான் சொல்ல தோன்றுகிறது. ஸ்விக்கி வெளியிட்டிருக்கும் சமீபத்திய கணக்கெடுப்பில் நம் மக்கள் எப்படிப்பட்ட பிரியாணி விரும்பிகள் என்பது நமக்கு புலப்படும். StatEATistics என்ற பெயரில் வெளியிடப்பட்ட அந்த சர்வேயில் கொரோனா தொற்றை தடுக்க ஏற்படுத்தப்பட்ட லாக்டவுனில் 5.5 லட்சம் பிரியாணி ஆர்டர்கள் தரப்பட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து பட்டர் நானும், மசாலா தோசையும் மக்களின் விருப்பமான உணவாக பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.

Advertisment

டெசர்ட் வகைகளில் 1 லட்சத்து 29 ஆயிரம் சாக்கோ லாவா கேக்குகள் ஆர்டர் பெறப்பட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து மக்கள் அதிக அளவில் குளோப் ஜாமூனும் பட்டர்ஸ்காச் மூஸ் கேக்கும் ஆர்டர் செய்துள்ளனர். சரியாக 8 மணிக்கு 65 ஆயிரம் இரவு உணவுகள் ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளது. அதே போன்று ரூ. 23.65 துவங்கி ரூ. 2, 500 வரையில் டிப்ஸ்களும் கொடுத்துள்ளனர் வாடிக்கையாளர்கள் என்று மறக்காமல் குறிப்பிட்டுள்ளது ஸ்விக்கி. ஆன்லைன் கொண்டாட்டங்கள் வரும் போது 1,20,000 ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

உணவுகள் டெலிவரி செய்வதோடு மட்டும் அல்லாமல், கொரோனா ஊரடங்கு காலத்தில் மளிகைப் பொருட்களையும் டெலிவரி செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது ஸ்விக்கி. 323 மில்லியன் கிலோ வெங்காயம், 56 மில்லியன் கிலோ வாழைப்பழம், 3,50,000 நூடுல்ஸ் பாக்கெட்டுகளையும் ஊரடங்கு காலத்தில் ஆர்டர் செய்துள்ளனர் பொதுமக்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ஸ்விக்கி ஜீனி (Swiggy Genie) மற்றொரு பக்கத்தில் மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்களை நாடு முழுவதும் டெலிவரி செய்தது. ஹோப் நாட் ஹங்கர் என்ற இயக்கத்தின் கீழ் 10 கோடு ரூபாய் நிதியில் 30 லட்சம் உணவுகள், ஏழை எளியவர்களுக்கு ஸ்விக்கி வழங்கியுள்ளது. 73 ஆயிரம் பாட்டில் ஹேண்ட்வாஷ்களையும், 47 ஆயிரம் முகக்கவசங்களையும் ஸ்விக்கி டெலிவரி செய்துள்ளது.

Coronavirus Swiggy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment