scorecardresearch

கனடா சாலை விபத்தில் 5 இந்திய மாணவர்கள் பலி – ஜெய்சங்கர் இரங்கல்

தெற்கு ஒன்டாரியோவில் உள்ள குயின்ட் வெஸ்ட் நகரில் நெடுஞ்சாலையில் கடந்த சனிக்கிழமை இந்த விபத்து நடந்துள்ளது.

கனடா சாலை விபத்தில் 5 இந்திய மாணவர்கள் பலி – ஜெய்சங்கர் இரங்கல்

கனடாவில் ஒன்டாரியோ பகுதியில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கனடியன் பிரஸ் தகவலின்படி, கடந்த சனிக்கிழமையன்று தெற்கு ஒன்டாரியோவில் உள்ள குயின்ட் வெஸ்ட் நகரில் நெடுஞ்சாலை 401 இல் சென்ற வேன் டிராக்டர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரன்பால் சிங், மோகித் சவுகான் மற்றும் பவன் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

உயிரிழந்தவர்கள் 21 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களே ஆவர். அனைவரும் கிரேட்டர் ரொறொன்ரோ, மாண்ட்ரீல் பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து ட்வீட் செய்த கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிஸாரியா, நெஞ்சைப் பிளக்கும் சோகச் சம்பவம் கனடாவில் நடந்துள்ளது. டொரன்டோ அருகே சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் ஐந்து இந்திய மாணவர்கள் இறந்தனர். இருவர் மருத்துவமனையில் உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். டொரன்டோவில் உள்ள இந்தியக் குழு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் தொடர்பில் இருந்து தேவையான உதவிகளை மேற்கொண்டு வருகிறது என பதிவிட்டிருந்தார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், கனடாவில் 5 இந்திய மாணவர்கள் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள். கனடா இந்திய தூதரகம் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: 5 indian students killed in canada road accident