5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இது, பெரும் பழைய கட்சி என பெயரேடுத்த காங்கிரஸை எதிர்த்து, சக கட்சிகளான ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிட வழிவகுக்கும். இந்த படுதோல்வி கட்சிக்கும் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் முதல் வாக்குப் பதிவு செய்யப்படுவதற்கு முன்பே, பாஜகவுக்கு எதிரான அணியை வழிநடத்தும் தகுதியையும், உரிமையையும் வேகமாக இழந்து வருவதாக எதிர்க்கட்சிகள் முகாமில் முணுமுணுப்பு எழுந்தது.
ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் காங்கிரசை வீழ்த்தியதாலும், உத்தரகாண்ட் மற்றும் கோவாவில் பாஜக தக்க பதிலடி கொடுத்ததாலும், காங்கிரஸ் உள்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உள்கட்சி தேர்தல் இந்தாண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள், கட்சியை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்ற ராகுல் எதிர்ப்பு குழுவின் வாதத்திற்கு வலு சேர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை
காந்திகளின் மேலாதிக்கத்தைக் குறைக்க, ரு கூட்டுத் தலைமை மாதிரியை வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ஏழ வாய்ப்புள்ளது. ஜி-23-ல் அங்கம் வகிக்கும் தலைவர்களைத் தவிர வேறு எந்தத் தலைவரும் தைரியமாகப் பேசுவதற்கும், தலைமை ஏற்கவும் வருவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கோவாவில் ஆட்சி அமைப்போம் என திரிணாமூல் காங்கிரஸ் திட்டவட்டமாக கூறி வந்த நிலையில், தோல்வியை சந்தித்துள்ளது. தற்போது, NCP மற்றும் RJD போன்ற கூட்டாளிகள் உட்பட எதிர்க்கட்சியில் உள்ள பல கட்சிகளும், பாஜகவை எதிர்க்கும் குழுவுற்கு புதிய நோக்கமும், தலைமையும் வேண்டும் என குரல் கொடுக்கின்றனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டுவதற்கான தனது விருப்பத்தை ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், இந்த முடிவு காங்கிரஸை ஆச்சரியப்படுத்தவில்லை. இருப்பினும், தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்வதற்காக மார்ச் 10 வரை காத்திருந்ததுள்ளது.
தேர்தல் முடிவுகளால் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படலாம் என சில தலைவர்கள் கணித்துள்ளனர். மேலும், ஹரியானாவில் பூபிந்தர் சிங் ஹூடாவைத் தவிர, கட்சிக்கு 10 அல்லது 20-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும் திறன் கொண்ட தலைவர்கள் காங்கிரஸில் இல்லை என்பதை தேர்தல் முடிவு காட்டியுள்ளது. இது, ராகுல் ஆதரவாளர்களால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் பல தலைவர்கள், காந்திக்கு விசுவாசமாக இருப்பவர்கள் கூட, பஞ்சாபை தலைமை கையாளும் விதம் சரியாக இல்லை என்று கருதுகின்றனர். பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் சுயமாக அழிந்துவிட்டதை ஒப்புக்கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை என்கின்றனர்.
சரண்ஜித் சிங் சன்னியை முதலமைச்சராக நியமித்த பின்னரும், மத்திய காங்கிரஸ் தலைமையால் மோட்டர்மவுத் நவ்ஜோத் சிங் சித்துவை கட்டுப்படுத்த முடியவில்லை. தலித் தலைவரை முதலமைச்சராக்கும் காங்கிரஸ் எண்ண வரவேற்பை பெற்றாலும், இடைவிடாத உட்பூசல் காரணமாக துணிச்சலான நடவடிக்கை கைகொடுக்காமல் போனது.
பிரியங்கா காந்தி வத்ராவின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக கருதப்படும் சிந்து, முதல்வரை குறைமதிப்பிற்கு உட்படுத்தினார். இரு தலைவர்களும் வெவ்வேறு பாதையில் பயணித்ததால், கட்சியின் முடிவை பல தலைவர்கள் முன்க்கூட்டியே கணித்தனர். எல்லை மாநிலத்தில் கட்சி எதிர்கொள்ளும் பேரழிவுக்கு காங்கிரஸ் மத்திய தலைமைதான் காரணம் என்று கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.