தேர்தல் காலத்தின் மத்தியில், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் தேர்தல் பேரணிகளில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY)திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் திட்டத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக அறிவித்தார்.
“PMGKAY-ன் கீழ், கடந்த 3 ஆண்டுகளாக நாட்டில் ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் இன்னும் 1 மாதத்தில் முடிவடையும் நிலையில், அதை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க
வேண்டும் என்பது மோடியின் உறுதி. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு என் நாட்டில் உள்ள 80 கோடி மக்களின் அடுப்புகள் எரிந்து கொண்டே இருக்கும். து மோடியின் உத்தரவாதம், ”என்று சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தனது உரையின் போது மோடி கூறினார்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 (NFSA)-ன் கீழ் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தகுதிவாய்ந்த நபர்களுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என கொரோனா தொற்று காலத்தில் அறிவிக்கப்பட்டது. PMGKAY 2020 எனப் பெயர் வைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. காங்கிரஸ் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட NFSA சட்டத்தில், மானிய விலையில் உணவு தானியங்கள் (ஒரு கிலோ அரிசி, கோதுமை மற்றும் குறிப்பிட்ட தானிய வகைகள் முறையே ரூ. 3, ரூ. 2 மற்றும் ரூ. 1) என வழங்கப்பட்டது.
2022-ன் பிற்பகுதியில், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, PMGKAY டிசம்பர் 2022 வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் டிசம்பர் 2023 வரை மேலும் ஒரு வருடம் NFSA உடன் இணைந்து நீட்டிக்கப்பட்டது. இத்திட்டம் அடுத்த மாதம் முடிவடையும் நிலையில் , இந்த முறை மேலும் 5 ஆண்டுகளுக்கு அரசு நீட்டித்துள்ளது.
இலவச ரேஷன் திட்டத்தின் நோக்கம்
NFSA-ன் கீழ் PMGKAY இரண்டு வகையான ரேஷன் கார்டுகளை வழங்குகிறது. அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) மற்றும் முன்னுரிமை குடும்பம் அட்டைதாரர்கள் (PHH) என அட்டை வழங்குகிறது.
NFSA திட்டம் சுமார் 20 கோடி குடும்பங்கள் அல்லது மொத்தமாக 81.35 கோடி பயனாளிகளை உள்ளடக்கியது. அவர்கள் நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் - நகர்ப்புறங்களில் 50% மற்றும் கிராமப்புறங்களில் 75% உள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/political-pulse/five-year-extension-free-ration-numbers-food-security-programme-9014843/
குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் AAY குடும்பங்கள் மாதத்திற்கு 35 கிலோ உணவு தானியங்களைப் பெறுவதற்கு உரிமையுடையவர்கள். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து முன்னுரிமை குடும்பங்கள் உணவு தானியங்களைப் பெறுகின்றன (ஒவ்வொரு உறுப்பினரும் மாதத்திற்கு 5 கிலோ) பெறுவார்கள்.
இலவச ரேஷன் குடும்பங்கள் சேமிப்பு
2022-23 நிதியாண்டில், AAY குடும்பங்கள் ஆண்டு சேமிப்பு ரூ 2,705 கோடி மற்றும் PHH குடும்பங்கள் ஆண்டு சேமிப்பு ரூ 11,142 கோடி ஆகும்.
PMGKAY-ன் கீழ் ஒதுக்கீடுகள்
இத்திட்டம் 2020-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, 3.9 லட்சம் கோடி ரூபாய் செலவில் அதன் மத்திய கொள்முதல் தொகுப்பிலிருந்து 1,118 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில், PMGKAY ஆனது NFSA உடன் இணைக்கப்பட்டது. AAY மற்றும் PHH குடும்பங்களுக்கு அனைத்து ரேஷன்களையும் இலவசமாக வழங்கியது மற்றும் தொற்றுநோயின் போது அறிமுகப்படுத்தப்பட்ட கூடுதல் ஏற்பாடுகளை நீக்கியது.
"இது (NFSA உடன்) இணைக்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்தின் இலவச பகுதி NFSA-ல் சேர்க்கப்பட்டுள்ளது. இப்போது, NFSA-ன் கீழ் 5 கிலோ மற்றும் 35 கிலோ முழு அளவும் இலவசமாகக் கிடைக்கும். கூடுதல் உணவு தானியங்கள் தேவையில்லை” என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
NFSA-ன் கீழ் மானிய உணவு தானியங்களை விற்பனை செய்வதன் மூலம் ஒரு வருடத்தில் அரசாங்கம் ரூ.13,900 கோடியைப் பெற்றது. இந்த கூடுதல் திட்டத்தின் மூலம், 2022-23ல் மொத்த உணவுப் பாதுகாப்பு மசோதா சுமார் ரூ.2.87 லட்சம் கோடியாக உயர்ந்தது.
இந்த ஆண்டு பட்ஜெட்டில், அனைத்து உணவு மானியங்களுக்கும் அரசாங்கம் 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாகவே ஒதுக்கியுள்ளது, இது முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க சரிவு. தொற்றுநோய் காலத்தில், உணவு மானியச் செலவு ரூ.5.41 லட்சம் கோடியாக இருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.