இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுப்பது? ஹரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி பலி!

உள்ளூர் மக்கள் போர்வெல்லுக்கு பக்கத்தில் பொக்லைன் கொண்டு பள்ளம் தோண்டிய போது, அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். ஆக்ஸிஜன் கிடைக்காமலும் அச்சத்தாலும் அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது

உள்ளூர் மக்கள் போர்வெல்லுக்கு பக்கத்தில் பொக்லைன் கொண்டு பள்ளம் தோண்டிய போது, அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். ஆக்ஸிஜன் கிடைக்காமலும் அச்சத்தாலும் அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
5 year old girl who fell into 50 feet deep borewell in haryana found dead - இன்னும் எத்தனை குழந்தைகளை பலி கொடுப்பது? ஹரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி பலி!

5 year old girl who fell into 50 feet deep borewell in haryana found dead - இன்னும் எத்தனை குழந்தைகளை பலி கொடுப்பது? ஹரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி பலி!

ஹரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஹரியானாவின் ஹர்சிங்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவானி (5). இவர் நேற்று வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது, கர்நாலில் உள்ள 50 அடி ஆழ போர்வெல்லில் விழுந்திருக்கிறார். ஆனால், சிறுமியை மற்ற இடமெங்கும் தேடிய பெற்றோர், ஆழ்துளை குழியில் பார்க்கவில்லை. இரவு 9 மணிக்கு தான் சிறுமி குழிக்குள் விழுந்தது பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து தேசியபேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

Advertisment
Advertisements

அவர்கள் வருவதற்குள்ளாகவே உள்ளூர் மக்கள் போர்வெல்லுக்கு பக்கத்தில் பொக்லைன் கொண்டு பள்ளம் தோண்டிய போது, அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். ஆக்ஸிஜன் கிடைக்காமலும் அச்சத்தாலும் அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

கடந்த வாரம் தான் திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுஜித் 80 அடி ஆழத்தில் விழுந்தான். சுமார் 5 நாட்கள் போராட்டத்துக்கு பிறகு அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான். இப்போது மீண்டும் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் சிறுமி விழுந்து பலியாகி இருப்பது மேலும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

Haryana

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: