12 மாநிலங்களில் நடத்தப்பட்ட சர்வே ஒன்றில் கழிவுநீர் சாக்கடைகளை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டினை விட நான்கு மடங்கு அதிகரித்துவிட்டது என்று கண்டறியப்பட்டுள்ளது. மனிதக் கழிவுகளை மனிதனே சுத்தம் செய்யும் அவலங்களைக் களைய மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளின் கீழ் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அதன் புள்ளிவிபரங்கள் அதிக அதிர்ச்சியினை தரும் தகவல்களை தந்திருக்கின்றது. /tamil-ie/media/media_files/uploads/2018/06/scavangers-in-India-2-.jpg)
இந்தியாவில் 12 மாநிலங்களில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் கடந்த ஆண்டில் இருந்த 13,000 என்ற எண்ணிக்கை 53,000 என்று எட்டியிருக்கின்றது. கடந்த ஆண்டு சர்வேயில், ”எங்கள் மாநிலங்களில் அப்படியாக துப்புரவுத் தொழிலாளர்கள் யாரும் இல்லை” என்று கூறிய இடங்களிலும் கூட, எண்ணிக்கை கூடியிருக்கின்றது. கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் யாவும் இந்தியாவில் இருக்கும் 600க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெறும் 121 மாவட்டங்களில் இருந்து பெறப்பட்டதாகும்.
இப்புள்ளி விபரங்களில், செப்டிக் டேங், இரயில்வேயில் கழிவறைகளை சுத்தம் செய்பவர்கள் ஆகியோர்களின் விபரங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. 53,000 பேர்கள் மத்திய அரசின் பட்டியலில் இருந்தாலும், 6650 பேர்களை மட்டுமே மாநில அரசின் உதவியுடன் அடையாளப்படுத்தி இருக்கின்றார்கள் இந்த சர்வேயில் ஈடுபட்டவர்கள்.
மனிதக் கழிவுகளை மனிதனின் உதவி கொண்டு அகற்றுவதை 1993லேயே தடை செய்துவிட்டது இந்திய அரசாங்கம். ஆனால், 2013ல் அச்சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரும் வரை இக்கொடுமைகள் நம் சமூகத்தில் அரங்கேறிக் கொண்டு தான் இருந்தது. இன்றும் பல்வேறு இடங்களில் இக்கொடுமைகள் நிகழ்வதை காணலாம். சமூக நீதி, ஊரக வளர்ச்சி, குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி, தேசிய சபாய் கரம்சரி நிதி மற்றும் வளர்ச்சி துறை ஆகிய அமைச்சகங்களின் உதவியால் இந்த கணக்கெடுப்பு மற்றும் வளர்ச்சி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையினை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
அவர்கள் அளித்த சர்வேயின் படி, சாக்கடைக் கழிவுகளை அகற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. வளர்ச்சி மேம்பாட்டுத்திட்டதின், கிராமப்புரங்களில் இருக்கும் கீழ் திறந்தவெளி கழிப்பிடங்கள் அனைத்தையும் ஒழித்துவிட்டு, சுகாதாரமான கழிவறைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் 18 மாநிலங்களில் இருக்கும் 170 மாவட்டங்களில் வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது.
/tamil-ie/media/media_files/uploads/2018/06/manual-scavangers-211x300.jpg)
மத்திய அரசின் சார்பில் பல்வேறு துறைகளில் இருந்து வந்திருக்கும் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இம்மாத இறுதிக்குள் இப்பணியை முடிக்க வேண்டிய நிலையில் இதுவரை 12 மாநிலங்களில் 121 மாவட்டங்களில் இப்பணி முடிந்துள்ளது. பிஹார், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, தெலுங்கானா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் இன்னும் சர்வே எடுக்கவில்லை.
எடுக்கப்பட்ட சர்வேயில் அதிகப்படியாக சாக்கடைக் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தும் மாநிலம் உத்திரப் பிரதேசம் தான். 28,796 நபர்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், உத்திரகாண்ட் போன்ற மா நிலங்களில் ஏற்கனவே தரப்பட்ட தரவுகளில் கழிவு நீர் சாக்கடைகளை சுத்தம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை 0 என்று இருந்தது. ஆனால், இம்முறை எடுக்கப்பட்ட சர்வேயில் அவர்களின் எண்ணிக்கை 100னைத் தாண்டியுள்ளது.
இந்த சர்வே அனைத்தும் கிராமப்புறங்களில் மட்டும் எடுக்கப்பட்டதாகும். திறந்த வெளிக் கழிப்பறைகளை மாற்றிவிட்டு சுகாதாரமான கழிவறைகளை பயன்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது தான் இத்திட்டம். மேலும், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி அமைச்சகம் , கழிவுகளை சுத்தப்படுத்தும் மக்கள் பற்றிய தகவல்கள் என்று தனியாக ஏதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. ஸ்வச் பாரத்தின் உதவியுடன் எடுக்கப்பட்ட சர்வேயில் கழிவறைகள், சாக்கடைகள் ஆகியவற்றை சுத்தம் செய்யும் மக்கள் பற்றிய கணக்கெடுப்பே நடைபெற்றிருக்கின்றது. இதில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்பவர்கள் பற்றிய எந்த ஒரு அறிவுப்பும் இல்லை.
இராஷ்ட்ரிய கரிமா அபியான் திட்டத்தில் இருக்கும் திரு. ஆசிப் ஷேக் இது பற்றி குறிப்பிடுகையில் 1993 சட்டத்தின் படி, 2004ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நாடு முழுவதும் சுமார் 7 லட்சம் துப்புரவுத் தொழிலாளர்கள் இருந்தது கண்டறியப்பட்டது.