இந்தியாவில் 11 மாநிலங்களில் காலியாக உள்ள 59 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், பெரும்பாலான தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.
மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றியும், 9 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 1 இடத்தில் வெற்றியும், 8 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது.
உத்தர பிரதேசத்தில் 7 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி 6 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 1 இடங்களிலும் வெற்றி பெற்றது.
குஜாராத் மாநிலத்தில் 8 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில்,ஆளும் பாரதிய ஜனதா கட்சி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது.
ஒடிசாவில் இரண்டு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பிஜூ ஜனதா தள் கட்சி இரு இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
மணிப்பூரில் நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில், பிஜேபி மூன்று இடங்களில் வெற்றியும், ஒரு இடத்தில் முன்னிலையும் பெற்றுள்ளது.
தெலுங்கானா மாநிலம் துபாக்கா தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆளும் கட்சியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றது.
கர்நாடகாவில், சிரா, ராஜேஸ்வரி நகர் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் ஆளும் பாஜக வெற்றி பெற்றது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மர்வாகி தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பிஜேபி - ஐக்கிய ஜனதாதள் கூட்டணிக்கும், மகா கட்ப்சிகளைச் சேர்ந்த கூட்டணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.