6-10 Pak soldiers, terrorists killed in counter-fire: ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நடைபெற்ற போர் நிறுத்த மீறல் தாக்குதலில் ஒரு சிவிலியன, இரண்டு ராணுவ வீரர்கள் பலியான பிறகு, நடத்தப்பட்ட பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (போக்) பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பாகிஸ்தான் இராணுவ நிலைகள் மீது இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை பயங்கர தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள், பயங்கரவாதிகல் 6 முதல் 10 பேர் வரை கொல்லப்பட்டதாக ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் தங்தார் செக்டரில் உள்ள குண்டிஷாத் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர். இருப்பினும், இந்தியா நடத்திய பதிலடி நடவடிக்கையில், ஐந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எல்லைக் கட்டுப்பாட்டு நிலையில் கொல்லப்பட்டனர் என்று பி.டி.ஐ தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்திய தூதர் கௌரவ் அலுவாலியாவை பாகிஸ்தான் அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வரவழைத்தது.
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு முழுவதும் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கு பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த மீறலை நாடியதாக ராணுவ வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு தெரிவித்தனர்.
“இந்திய எல்லைகள் முழுவதும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து உதவி செய்தால், தேர்வு செய்யப்பட்ட நேரத்திலும் இடத்திலும் பதிலளிக்கும் உரிமையை இந்திய இராணுவம் தக்க வைத்துக் கொண்டுள்ளது” என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
பூஞ்ச் மாவட்டத்தில் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து சிறிய ரக ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 27 வயதான பெண் ஒருவர் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானின் போற் நிறுத்த மீறல்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், ஆகிய இந்த மாதங்களைவிட ஒருங்கிணைந்த போர் நிறுத்த மீறல்கள் காணப்பட்டன.
கடந்த வாரம், வடக்கு ராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங், ஆகஸ்ட் மாதம் இந்தியா 370வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பின்னர், பள்ளத்தாக்கை கொந்தளிப்பில் வைக்க பாகிஸ்தான் போராளிகளைத் தள்ள முயற்சிப்பதாகக் கூறியிருந்தார்.
பயங்கரவாத பயிற்சி முகாம்கள் இன்னும் எல்லை முழுவதும் செயல்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் அவர்களுக்கு ஆயுதங்கள் உட்பட அனைத்து வகையான ஆதரவையும் வழங்க முயற்சிக்கிறது. அவர் சமீபத்தில் பஞ்சாபில் ட்ரோன்களின் உதவியுடன் ஆயுதங்களை வீழ்த்தியது அந்த திசையில் ஒரு படி என்று கூறினார். ராணுவம் திறமையாக அத்தகைய வடிவமைப்புகளை வீழ்த்த முழுமையாக தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார்.
2019 ஆம் ஆண்டில், ஜூலை மாதம் 296 போர்நிறுத்த மீறல்களும் ஆகஸ்ட்டில் 307, செப்டம்பரில் 292 போர் நிறுத்த மீறல்களும் நடந்துள்ளது.
2017 ஜூலையில் 68 போர் நிறுத்த மீறல்களும், 2018 ஜூலையில் 44 போர் நிறுத்த மீறல்களும், 2017 ஆகஸ்ட்டில் 108, 2018 ஆகஸ்ட்டில் 44 போர் நிறுத்த மீறல்களும் நடந்துள்ளது. அதே போல, 2017 செப்டம்பரில் 101-ம் 2018 செப்டம்பரில் 102 போர் நிறுத்த மீறல்களும் நடந்துள்ளன.
இதனிடையே, போர்நிறுத்த மீறலுக்கு எதிரான பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத நிலைகள் மீதும் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீதும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், ராணுவத் தலைமை ஜெனரல் பிபின் ராவத் இந்த தாக்குதலில் ஆறு முதல் பத்து பாகிஸ்தான் வீரர்களும் பல பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
#WATCH Army Chief General Bipin Rawat on Indian Army used artillery guns to target terrorist camps in PoK: On the basis of reports that we have been getting, 6-10 Pakistani soldiers have been killed, 3 camps have been destroyed. Similar no. of terrorists have also been killed... pic.twitter.com/a19gOD90Ab
— ANI (@ANI) October 20, 2019
“நேற்று மாலை தாங்தாரில் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது நாங்கள் பதிலடி கொடுத்தோம். பாகிஸ்தான் நம்முடைய நிலைகள் மீது தாக்குதல் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் நாங்கள் பாதிக்கப்பட்டோம். ஆனால் அவர்கள் ஊடுருவலுக்கு முயற்சிக்கும் முன்பு அந்த பயங்கரவாத முகாம்களை குறிவைக்க முடிவு செய்யப்பட்டது” என்று செய்தி ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் ராவத் கூறியதை மேற்கோள் காட்டியுள்ளது.
“பதிலடி நடவடிக்கையில், பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு நாங்கள் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளோம். தங்தார் பிரிவுக்கு எதிரே உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. எங்களுக்கு கிடைத்து வரும் தகவல்களின் அடிப்படையில், ஆறு முதல் பத்து பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மூன்று முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதேபோன்ற எண்ணிக்கையிலான பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்…”என்று ராவத் கூறினார்.
இருப்பினும், இந்திய இராணுவம் தங்களது பயங்கரவாத முகாம்களை குறிவைத்ததாக வெளியான செய்திகளை பாகிஸ்தான் நிராகரித்துள்ளதுடன், இந்தியாவின் “பொய்யை” அம்பலப்படுத்த பி5 நாடுகளில் இருந்து தூதர்கள் இப்பகுதிக்கு வருகை தர ஏற்பாடு செய்ய முடியும் என்றும் கூறியுள்ளது.
பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜ் ஜெனரல் ஆசிப் கபூரும் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ஊடகங்கள் பொய் கூறுகின்றன என்று செய்திகளை நிராகரித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.