புதுச்சேரியில் உள்ள கடற்கரையில் தடையை மீறி குளித்தால் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு சுற்றுலாத்துறை பரிந்துரை செய்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த ஆண்டு மட்டும் பல்வேறு கடற்கரைகளில் மூழ்கி 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்தனர்.
இந்த நிலையில், 2024 ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் கடலில் குளித்த 4 பேர் மாணவர்கள், அடுத்தடுதது இருவர் என கடந்த 20 நாள்களில் மட்டும் 6 பேர் மரணித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, புதுச்சேரி அரசு கடலில் குளிக்க தடை விதித்துள்ளது. எனினும், தடையை மீறி சுற்றுலா பயணிகள் குளிப்பதை பார்க்க முடிகிறது.
இதையடுத்து, புதுச்சேரியில் உள்ள கடற்கரையில் தடையை மீறி குளித்தால் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு சுற்றுலாத்துறை பரிந்துரை செய்துள்ளது.
அண்மை காலமாக கடலில் மூழ்கி உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“