65 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழா: பெரும் சர்ச்சைக்கு இடையில் நடந்து முடிந்தது.

சிறந்த தமிழ்ப் பட விருதுக்கு தேர்வான தமிழகத்தை சேர்ந்த செழியன் உள்ளிட்டோர் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

குடியரசு தலைவர்கள் மாளிகையில் நடைப்பெற்ற 65 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் அமைச்சர் ஸ்மிருதி இரானி கையினால் விருதுகளை வாங்க மாட்டோம் என்று 68 கலைஞர்கள்  விழாவை புறகணித்தனர்.

 

மாலை 6. 20 : சிறந்த நடிகைக்கான சிறப்பு விருதை “டேக் ஆஃப்” படத்திற்காக பார்வதி மேனன் புறகணித்தார்.

மாலை 6. 15:  சிறந்த இசையமைப்பாளாருக்கான விருதை ஏ.ஆர். ரகுமான் குடியரசு தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.  

மாலை 6. 15: சிறந்த நடிகைக்காக மாம் படத்தில் நடித்த ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டது. அந்த விருதை ஸ்ரீதேவியின் கணவரும், அவரின் மூத்த மகளும் பெற்றுக் கொண்டனர்.

மாலை 6.15 :   சிறந்த பாடகருக்கான விருதை ஜே. யேசுதாஸ்  குடியரசு தலைவர் கைகளால் பெற்றுக் கொண்டார். 

மாலை 6.00 :  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  கலைஞர்களுக்கு விருது வழங்க ஆரம்பித்தார்.

மாலை 5.44:  தேசி விருதுகள் வழங்கும் அரங்கத்திற்கு வருகை தந்தார் குடியரசு தலைவர்  ராம் நாத் கோவிந்த்

மாலை 5.20: இந்திரா காந்தி விருதை  சிறந்த அறிமுகப்படமான ’சிங்ஜர்’ க்கு வழங்கப்பட்டது.

மாலை 5. 15: காற்று வெளியிடை படத்தில் இடம்பெறும் வான் வருவான் பாடலுக்காக சிறந்த பாடகி விருதை சாஷா பெற்றுக் கொண்டார்.

மாலை 5. 12 :  பாகுபலி படத்திற்கு சிறந்த வரைக்கலைக்கான விருது வழங்கப்பட்டது. 

மாலை 5. 10 : சிறந்த மலையாள படமாக தேர்வாகி ’தொண்டிமுதலும் திரிக்‌சாஷியும்” படத்திற்கு விருது வழங்கப்பட்டது

மாலை 5. 00 :  நியூட்டன் திரைப்படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டது

மாலை 4. 50 : விழாவை புறகணிப்பதாக அறிவித்த சில கலைஞர்கள் மீண்டும் அரங்கத்திற்குள் சென்றனர்.

மாலை 5. 00 : திட்டமிட்டப்படி விருது வழங்கும் விழா தொடங்கியது.

மாலை 4. 50 :  விருதுகளை புறகணித்த கலைஞர்களின் இருக்கைகள் அதிரடியாக  நீக்கப்பட்டனர்.

மாலை 4. 40:  செய்தியாளர்களை சந்திக்க திரைப்பட கலைஞர்கள் தயாரானார்கள்.

மாலை 4. 30 : விழாவில் கலந்துக்  கொள்ள மாட்டோம் என்று  68 கலைஞர்கள்  விழாவை புறக்கணித்தனர்.

 

2017ஆம் ஆண்டுக்கான 65-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 13ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய ‘டூலெட்’  திரைப்படம் பெற்றுள்ளது. காற்று வெளியிடை மற்றும் ஸ்ரீதேவி நடித்த மாம் படத்திற்கு இசையமைத்தற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்ட விருதுகள் அனைத்தும் வரும் மே 3-ஆம் நாள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே அறிவித்தப்படி இன்று (3. 5.19) மாலை  டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில்  விருதுகள் வழங்க அனைத்து பணிகளும்  நடைப்பெற்றன. விருது வாங்கும் கலைஞர்களும்  டெல்லியில் உள்ள அசோக ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், தான்  தேசிய விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களில் குறிப்பிட்ட 11 பேருக்கு மட்டும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்க இருப்பதாகவும்.மற்றவர்களுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விருது வழங்குவார் என்றும் தகவல் வெளியானது.

 

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத  கலைஞர்கள் மத்திய அரசு பாரம்பரியத்தை மீறிவிட்டதாகவுன், பெருமைக்குரிய விருதான தேசிய விருதை குடியரசு தலைவர் கையால் மட்டுமே வாங்க ஆசைப்படுவதாக மூத்தக் கலைஞர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த விழாவை அவர்கள் புறகணிப்பதாகவும்  தனித்தனியாக கடிதம் எழுதிவிட்டு விழாவை புறகணித்தனர். சிறந்த தமிழ்ப் பட விருதுக்கு தேர்வான தமிழகத்தை சேர்ந்த செழியன் உள்ளிட்டோர் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

×Close
×Close