கர்நாடகாவில் காவல்துறை அதிகாரிகளின் பணியிட மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்ட விவகாரத்தில் மதச்சார்பற்ற ஜனதா தள்ளத் தலைவர் குமாரசாமி ஆளும் கட்சி மீது ஊழல் புகாரை கூறியுள்ளார்.
பெங்களூரு பிராந்தியத்தில் சுமார் 69 காவல்துறை அதிகாரிகளின் இடமாற்றத்தை நிறுத்த சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு தள்ளப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக, இந்த அதிகாரிகளை இடம் மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: கலப்பு திருமணம், மனைவி மரணம்… அரசுடன் போராடி உடைந்து போன பீகார் மனிதர்!
முன்னதாக, கர்நாடக காவல் துறை இந்த வார தொடக்கத்தில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் (டி.எஸ்.பி) தரத்தில் உள்ள 211 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய திட்டமிட்டு இருந்தது.
இந்த நிலையில், பெங்களூரு நகரம் மற்றும் பெங்களூரு கிராமப்புறங்களில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் மற்றும் டிஎஸ்பிகள் உட்பட சுமார் 69 காவல்துறை அதிகாரிகளின் இடமாற்றத்தை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2023 மே மாதம் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, காவல்துறையின் முதல் பெரிய இடமாற்றம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்த சர்ச்சைகள் பெரும்பாலும் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அமைச்சர் ஜி பரமேஸ்வரரை சுற்றி காணப்பட்டன.
இதற்கிடையில், சனிக்கிழமையன்று, ஜனதா தளம் (மதச்சார்பற்ற) தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்.டி. குமாரசாமி, அதிகாரிகள் இடமாற்றங்கள் தொடர்பான காங்கிரஸ் ஆட்சியின் உள் பூசல்களை எடுத்துக்காட்டி, அவர்கள் ஏன் காவல்துறை இடமாற்றங்களைத் தடுத்து நிறுத்தினார்கள் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்தவிவகாரத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் குமாரசாமி ஆளும் கட்சி மீது ஊழல் புகாரை கூறியுள்ளார். இந்த நிலையில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் தொடக்கத்தில், பதவியில் உள்ள அதிகாரிகள் ஒரு வருடத்தை நிறைவு செய்ததால், இடமாற்றத்திற்கு தகுதி பெற்றனர். காவல்துறை இடமாற்றங்கள் ஊழலை உள்ளடக்கியதாகக் கருதப்படுகிறது, குறிப்பாக பெங்களூருவில் பணியிடங்கள் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“