அமெரிக்க அதிபருக்கு மோடி கொடுத்த ஸ்பெஷல் பரிசுகள்: வைரக் கல் முதல் சந்தனப்பெட்டி வரை கொடுக்க காரணம் இதுதானா?
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவிக்கு, 7.5 கேரட் பச்சை கல் வைரத்தையும், கையால் செய்யப்பட்ட சந்தனப் பெட்டியையும் பரிசாக வழங்கினார்.
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவிக்கு, 7.5 கேரட் பச்சை கல் வைரத்தையும், கையால் செய்யப்பட்ட சந்தனப் பெட்டியையும் பரிசாக வழங்கினார்.
Advertisment
அமெரிக்காவில் 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார், பிரதமர் மோடி. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன், பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் விருந்து நிகழ்வை நடத்தினர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 7.5 கேரட் பச்சை கல் வைரத்தையும், சந்தனப் பெட்டியையும் பரிசாக வழங்கினார். இந்நிலையில் கிருஷ்ண யஜுர் வேதத்தில் குறிப்பிடப்பட்ட வைகானச-கல்ப சூத்திரம் என்ற சடங்கு முறையை குறிப்பிடும் வகையில் இந்த சந்தனப் பெட்டி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சந்தனப் பெட்டியில் 10 விஷயங்களை குறிக்கும் பொருட்கள் உள்ளது. விநாயகர் சிலை உள்பட 10 பொருட்கள் உள்ளது. ‘ உபநிடத்தின் 10 பண்புகள்’ (The Ten Principal Upanishads) என்ற புத்தகத்தின் முதல் பிரதியை ஜோ பைடனுக்கு வழங்கினார். ஃபேபர் மற்றும் லண்டனின் ஃபேபர் தனியார் நிறுவனம் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது. மேலும் யுனிவர்சிட்டி பிரஸ் கிளாஸ்கோவில் இந்த புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது.
மேலும் ஜோ பைடனின் மனைவிக்கு வழங்கப்பட்ட 7.5 கேரட் வைரமானது சுற்றுச்சூழலுக்கு பாதிக்காத வகையில், சூரிய வெளிச்சம் மற்றும் காற்றின் ஆற்றலில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வைரம், ஒரு கேரட்டுக்கு 0.028 கிராம் கார்பனை மட்டுமே வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வைரத்தை வைத்திருக்கும் பெட்டியானது காஷ்மிரில், காகிதத்தால் செய்யப்படும் தனிவகை பெட்டி. சிறந்த கைவினை கலைஞர்கள் இந்த பெட்டியில் அழகான வடிவங்களை உருவாக்குவார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“