ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கன்டுகூர் (Kandukur) என்ற இடத்தில் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்ட பேரணி ஒன்றை நடத்தினார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என சந்திர பாபு நாயுடு அறிவித்துள்ளார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், முன்னாள் முதலமைச்சர் வந்தபோது, பாரிய கூட்டத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது, நெரிசலில் இருந்து தப்பிக்க சிலர் அருகிலுள்ள வடிகால் கால்வாயில் குதித்தனர், ஆனால் அதிகமான மக்கள் அதைப் பின்பற்றியதால், குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர் என்றனர்.
தெலுங்கு தேச கட்சி பொதுக்கூட்ட பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, தொண்டர்கள் 7 பேர் உயிரிழந்துவிட்டனர் எனத் தெரிந்ததும் கூட்டத்தை ரத்து செய்தார்.
சந்திர பாபு நாயுடு, இதேமி கர்மா மன ராஷ்டிரனிகி (நம் மாநிலம் ஏன் இந்த கதியை எதிர்கொள்கிறது) என்ற தேர்தல் பரப்புரையை நடத்திவருகிறார். சம்பவம் நடந்தபோது, இந்தப் பரப்புரையின் ஒரு பகுதியாக பொதுக்கூட்டம் மற்றும் ரோட்ஷோவை நடத்திக் கொண்டிருந்தார்.
72 வயதான சந்திர பாபு நாயுடு, கர்னூரில் நவம்பர் 16ஆம் தேதி ஜெகனை நீக்கிவிட்டு, ஆந்திராவை மீட்போம் என சூளூரைத்தார். மேலும், 2024ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் இதுதான் என் கடைசி தேர்தலாக இருக்கும்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/