ஆந்திர ஏரியில் 7 தமிழர்களின் உடல் மீட்பு!

ஆந்திர மாநிலம் கடப்பா அருகில் உள்ள ஒண்டிமெட்டா ஏரியில் இருந்து ஏழு பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது

கடப்பா அருகே வனப்பகுதியில் உள்ள ஏரியில் ஏழு தமிழர்களின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா அருகில் உள்ள ஒண்டிமெட்டா ஏரியில் இருந்து ஏழு பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏழு பேரும் தமிழகத்தைச் சேர்ந்த செம்மர கூலித் தொழிலாளிகள் என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரும் வனத்துறையினரால் கொல்லப்பட்டார்களா அல்லது தப்பியோடும் போது ஏரியில் விழுந்து இறந்தார்களா என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இருப்பினும், செம்மரம் வெட்ட வந்த தொழிலாளர்களை விரட்டியபோது ஏரியில் விழுந்ததாக ஆந்திர வனத்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More Details Awaited…

×Close
×Close