Advertisment

ஆட்டோ-தனியார் பேருந்து மோதல்: ஏனாமில் 7 பெண்கள் உயிரிழப்பு

ஆட்டோ மீது தனியார் பேருந்து வந்த வேகத்தில் மோதியதில் 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

author-image
WebDesk
New Update
7 women killed in Yanam accident

விபத்தில் காயமுற்ற பெண்கள் காக்கிநாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

ஏனாமில் இருந்து 11 கிமீ தொலைவில் உள்ள கொரிங்கா கிராமத்தில் அமைந்துள்ள அபெக்ஸ் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் 14 பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (மே14) தல்லாரேவ் அருகே ஏனாம் நோக்கி வந்த ஆட்டோ மீது தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisment

விபத்தில் காயமுற்ற பெண்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் 7 பெண்களை புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் எம்எல்ஏ கொல்லப்பள்ளி அசோக் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்த விபத்தில், கர்ரி பார்வதி, செசெட்டி வெங்கடலட்சுமி, கல்லி பத்மா, நிம்மகயால லக்ஷ்மி , சிந்தபள்ளி ஜோதி, பொக்கா ஆனந்த லக்ஷ்மி உள்ளிட்ட 7 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஏனாமில் உள்ள ஏழாம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.இந்த விபத்து நடந்ததை அறிந்ததும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை புதுச்சேரிக்கான டெல்லி பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவ் தொடர்பு கொண்டு காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வலியுறுத்தினார்.

விபத்தில் காயமுற்ற பெண்கள் காக்கிநாடா அரசு மருத்துவமனையில்

சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

செய்தியாளர் பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Road Accident
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment