72வது சுதந்திர தினம் : வரலாற்றில் நடந்தவற்றை திரும்பிப் பார்க்க ஒரு வாய்ப்பு

72 Independence Day: நம் சுதந்திர தினத்திற்கு பின்னால் இருக்கும் சில முக்கிய வரலாற்று நிகழ்வுகள் ஒரு பார்வை

72 Independence Day: நம் சுதந்திர தினத்திற்கு பின்னால் இருக்கும் சில முக்கிய வரலாற்று நிகழ்வுகள் ஒரு பார்வை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுதந்திர தினம்

72 Independence Day Celebration

நாம் ஏன் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம் என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா?  72வது சுதந்திர தினம் நாளை நடைபெற இருக்கிற நிலையில்  இந்த சுதந்திரத்தை அடைவதற்காக நாம் பயணித்த பாதை ஒரு பார்வை.

Advertisment

சுதந்திர தினம் அறிவிப்பும் - இரண்டாம் உலகப் போரும்

இந்தியாவில் எண்ணற்ற போராட்டக்காரர்களின் ஒரே எண்ணம் மற்றும் விருப்பமாக அமைந்திருந்தது சுதந்திர இந்தியா. ஆனால் அதை இந்தியா மற்றும் இங்கிலாந்து என இரண்டு நாடுகள் மட்டும் சேர்ந்து எடுத்த முடிவில்லை.

எந்த ஒரு நிகழ்வு இவ்வுலகில் நடைபெற்றாலும் அது உலகில் இருக்கும் அனைத்து நாடுகளையும் பாதிக்கும். நன்மை தீமை என இரண்டிற்கும் பொருந்தும் இக்கொள்கை. அப்படியாக அமைந்தது தான், இரண்டாம் உலகப் போரின் முடிவும் சர்வதேச அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையும்.

Advertisment
Advertisements

இரண்டாம் உலகப் போரின் முடிவில் கைவிட்டு எண்ணிவிடும் அளவில் தான் சேதாரம் ஆகாத ஐரோப்பிய நாடுகள் இருந்தன. கலாச்சாரம், வாழ்வியல் முறை, குடும்ப உறவு, சமுதாயம், பொருளாதாரம் என அனைத்திலும் ஏற்றத் தாழ்வுகள்.

அன்றைய காலத்தில் மாபெரும் வல்லரசாக திகழ்ந்த பிரிட்டனும் பொருளாதார பின்னடைவை சந்தித்தின. 1945க்குப் பிறகான தேர்தலில் உழைப்பாளர்கள் கட்சி நாட்டின் ஆட்சியை கைப்பற்ற பிரிட்டனின் காலணிய ஆதிக்கங்களில் இருந்த நாடுகளின் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டது.

மேலும் ஐக்கிய நாடுகளின் அவையில் ஒரு அங்கத்தினராக இருக்க வேண்டும் என்ற பட்சத்தில் ஒரு நாடு மற்றொரு நாட்டினை அடக்கி ஆளுதல் கூடாது மற்றும் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது போன்ற அம்சங்களை கடைபிடிக்கக் கோரி சாசனம் எழுதப்பட்டது.

1945ல் ஐக்கிய நாடுகளின் சபை உருவான பிறகே பல்வேறு நாடுகளின் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவில் இருந்து வெளியேற விரும்பிய பிரிட்டன்

1848ம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து பிரிட்டன் வெளியேற விரும்பியது. ஆக 1948ம் ஆண்டிற்குள் இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டு விடும் என்று பிரிட்டன் கூறியது. இந்த பணிகளை துரிதமாக நடத்த இந்தியா அனுப்பப்பட்டார் லார்ட் மவுண்ட்பேட்டன்.  காங்கிரஸ் தலைவர் நேருவையும் முஸ்லீம் லீக் தலைவர் ஜின்னாவையும் சமாதானப்படுத்தி ஒற்றை நாடாக இந்தியாவை வைக்க முயற்சி செய்தார். ஆனால், அதில் எந்த பலனும் இல்லாததால், இரு தரப்பினரை வேகமாக பணியாற்ற வைக்க, சுமார் 10 மாதங்கள் முன்னதாகவே சுதந்திரம் கொடுக்க முடிவெடுத்தார்.

பாகிஸ்தான் சுதந்திர தினம்

இன்று பாகிஸ்தானின் சுதந்திர தினம். இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிற்கு மக்கள் பிரிந்து சென்றது தான் போரற்ற காலங்களில் நடைபெற்ற மிகப் பெரிய இடம் பெயர்தல் இது.

இஸ்லாமியர்களுக்கு தனி நாடு என்ற கோரிக்கை முன்வரவும் அதற்கான சமாதானப் பேச்சு வார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துவிட்டன. முகமது அலி ஜின்னா தான் கொண்ட கோரிக்கையில் முழு மனதாக நின்று பாகிஸ்தான் என்ற நாட்டினை உருவாக்கிவிட்டார். ஆனால் அதற்கான இழப்பீடுகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை.

ஒன்றரைக் கோடிக்கு மக்கள் அகதிகளாக்கப்பட்டார்கள். கூட்டுப் பாலியல் பலாத்காரங்கள் ஆங்காங்கு அரங்கேறின. சொத்துகள் கொள்ளையிடப்பட்டன. கொலைகள் நிகழந்தன. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இரு தரப்பில் இருந்தும் உயிரிழந்தார்கள்.

பாகிஸ்தான் இந்தியாவில் இருக்கும்  வரை இந்தியாவிற்கான சுதந்திர தினத்தை அறிவிக்க இயலாது என்று எண்ணிய மவுண்ட் பேட்டன் முதலில் பாகிஸ்தானிற்கு சுதந்திரம் அளித்தார். ஆகஸ்ட் 14ம் தேதி நள்ளிரவில் இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்து அறிவித்தார் மவுண்ட் பேட்டன். ஆகஸ்ட் 14ம் தேதி தனிப்பட்ட ரீதியில் மவுண்ட் பேட்டனிற்கு மிகவும் முக்கியமான நாளாகும். அதனாலே அத்தேதி முடிவு செய்யப்பட்டது.

இந்தியா பாகிஸ்தான் எல்லைக் கோடுகள்

சுதந்திர தினம் அறிவிக்கப்பட்ட போது இந்து மற்றும் இஸ்லாமிய மக்கள் மத்தியில் பயங்கர கலவரம் நிகழ ஆரம்பித்தது. கொல்கத்தாவில் நிலைமை மிகவும் மோசமாக பிரச்சனைகளை சமாளிப்பதற்காக காந்தி கல்கத்தாவில் இருந்தார்.

இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைகளை பிரிப்பதற்காக பிரிட்டன் நாட்டினை சேர்ந்த சிரில் ராட்கிளிஃப் நியமிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு நாற்பது நாட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்ததால் அவசர அவசரமாக எல்லைகள் வகுக்கப்பட்டு மவுண்ட்பேட்டனால் ஆகஸ்ட் 17ம் தேதி வெளியிடப்பட்டது. அதுவரை லாகூர், கொல்கத்தா, மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் இருந்த மக்களுக்கு நாம் எந்த நாட்டில் வாழ்கிறோம் என்ற தெளிவே இல்லாமல் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு ஆண்டுகள் அமைதியாக போராட்டம் நடத்தி சுதந்திரம் என்ற வார்த்தையினை ஆங்கிலேயர்களிடம் இருந்து பெற எத்தனை எத்தனையோ இழப்புகளை சந்தித்தோம். ஆனால் அத்தனை தியாகங்களையும் ஒன்றும் இல்லை என்று ஆக்கிவிட்டது இந்த பிரிவினை.

அதற்கு பின்னான நாட்களில் நாம் கொண்டாடும் சுதந்திர கொண்டாட்டங்கள் எப்போதுமே தியாகிகளை மட்டும் நினைத்து கொண்டாடப்படுவதில்லை. இந்த பிரிவினையால் உயிரிழந்த லட்சக்கணக்கான மக்களின் தியாகத்தினையும் நினைத்தே கொண்டாடுகிறோம் இந்த சுதந்திர தினத்தை.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: