lok-sabha | rajya-sabha | dmk | congress | மாநிலங்களவயில் திங்கள்கிழமை (டிச.18) 45 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 34 பேர் குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய காலத்திற்கு இடைநீக்கத்தை எதிர்கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில் 11 பேர் சிறப்புரிமை குழு அவர்களின் நடத்தை குறித்த அறிக்கையை வழங்கும் வரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சபை நடவடிக்கைகளை சீர்குலைத்ததற்காக காங்கிரஸைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு மற்றும் தயாநிதி மாறன் மற்றும் டி.எம்.சி.யைச் சேர்ந்த சவுகதா ராய் உட்பட மொத்தம் முப்பத்து மூன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அதே நேரத்தில் மூன்று உறுப்பினர்கள் சிறப்புரிமைக் குழுவின் அறிக்கை நிலுவையில் இருந்து இடைநீக்கத்தை எதிர்கொண்டனர். ஜெயக்குமார், விஜய் வசந்த் மற்றும் அப்துல் கலீக் ஆகிய மூவரும் சபாநாயகர் மேடையில் ஏறி முழக்கங்களை எழுப்பினர். இந்நிலையில், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
மக்களவை பாதுகாப்பு மீறல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளிக்கு மத்தியில், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2023 மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசு (திருத்தம்) மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றங்களில் சட்டம் இயற்றும் செயல்முறைகளில் பொதுப் பிரதிநிதிகளாக பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பங்கேற்பை அதிக அளவில் செயல்படுத்துவதற்கு இரண்டு மசோதாக்களும் முயல்கின்றன. லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் திங்கள்கிழமை மீண்டும் குழப்பமான காட்சிகள் வெளிப்பட்டன, இது விரைவான ஒத்திவைப்புக்கு வழிவகுத்தது.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் ‘பாஜக ஜவாப் தோ, சதன் சே பாக்னா பண்ட் கரோ’ (பாஜக, எங்களுக்கு பதில் சொல்லுங்கள், நாடாளுமன்றத்தை விட்டு ஓடுவதை நிறுத்துங்கள்) என்று கோஷமிட்டனர். தொடர்ந்து, நாடாளுமன்ற வாசலில் அமர்ந்து போராட்டத்தில ஈடுபட்டனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.