Advertisment

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருடன் மோதல்; 8 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த பெரும் துப்பாக்கிச் சண்டையில் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

author-image
WebDesk
New Update
chhattisgarh army

Jayprakash S Naidu

Advertisment

சத்தீஸ்கரின் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கங்களூரில் சனிக்கிழமை காலை பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த பெரும் துப்பாக்கிச் சண்டையில் 8 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஆங்கிலத்தில் படிக்க: 8 killed in encounter between security forces and Maoists in Chhattisgarh’s Bijapur

மாவட்ட ரிசர்வ் காவலர் படை (DRG), சிறப்புப் பணிப் படை (STF), மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) பட்டாலியன் எண் 222 மற்றும் சி.ஆர்.பி.எப்.,பின் எலைட் கமாண்டோ பட்டாலியன் ரெசல்யூட் ஆக்ஷன் (கோப்ரா) எண் 202 பட்டாலியன் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த என்கவுன்டர் வந்தது. காலை 8.30 மணிக்கு என்கவுன்டர் தொடங்கியதாகவும், இன்னும் நடவடிக்கை தொடர்வதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisment
Advertisement

பஸ்தார் ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுந்தர்ராஜ் இந்த என்கவுன்டர் நிகழ்வுகளை உறுதிப்படுத்தினார்.

சத்தீஸ்கரில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நடந்த பல்வேறு என்கவுன்டர்களில் 48 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.

மார்ச் 2026 க்குள் இந்தியாவில் இருந்து இடதுசாரி தீவிரவாதத்தை (LWE) ஒழிக்க "இரக்கமற்ற நடவடிக்கை" எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆகஸ்ட் மாதம் கூறிய நிலையில், மாநிலத்தில் ஒரு பெரிய கிளர்ச்சி உந்துதலுக்கு மத்தியில் இந்த என்கவுன்டர்கள் வந்துள்ளன.

Chhattisgarh Maoist
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment