Advertisment

பீகார் ஊழலில் விஐபி கான்ட்ராக்டர்கள்: ஜேடியு தலைவரின் குடும்பத்துக்கு ரூ.80 கோடி ஒப்பந்தம்

20 மாவட்டங்களில் நேரடியாக நடத்திய ஆய்வில், அனைத்து திட்டங்களும் ஜெடியூ கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, பாஜக கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த மூத்த தலைவர்களின் உறவினர்களுக்கே கிடைத்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

author-image
WebDesk
New Update
பீகார் ஊழலில் விஐபி கான்ட்ராக்டர்கள்: ஜேடியு தலைவரின் குடும்பத்துக்கு ரூ.80 கோடி ஒப்பந்தம்

பீகாரில் அனைத்து வீடுகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் என்கிற திட்டத்தில் துணை முதலவர் பிரசாத் குடும்பத்துக்கு ரூபாய் 53 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக நமது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தளம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டதாக நேற்று செய்தி வெளியிட்டோம். இதுதொடர்பாக பிரசாத்திடம் கேள்வி எழுப்புகையில், வியாபாரம் செய்வதில் எவ்வித தவறும் இல்லை என்ற அதிர்ச்சி பதிலைக் கூறினார்.

Advertisment

இவ்விவகாரம் குறித்து கூடுதல் ஆய்வு நடத்துகையில், மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

சமஸ்டிபூரிலிருந்து மதுபானி மற்றும் ஜாமுய் முதல் ஷேக்புரா என குறைந்தது 20 மாவட்டங்களில் நேரடியாக நடத்திய ஆய்வில், அனைத்து திட்டங்களும் ஜெடியூ கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, பாஜக கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த மூத்த தலைவர்களின் உறவினர்களுக்கே கிடைத்துள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளோம்.

இந்த பட்டியலில் முதலிடத்தில், ஜேடியு கட்சி முன்னாள் மாநில செயலாளர் அனில் சிங்கின் குடும்பம் தான் உள்ளது. அவர்களுக்கு மட்டும் சுமார் 80 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கிடைத்துள்ளன. அனில் சிங் இன்னமும் மாநில அரசியலில் முக்கிய தலைவராக வளம் வருகிறார். முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் கட்சியின் அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பட்டியலில், பாஜக எம்எல்ஏ வினோத் நாராயண் ஜாவின் மருமகனும் இடம்பெற்றுள்ளார். 2019-20இல் வினோத் நாராயண் PHED (பொது சுகாதார பொறியியல் துறை) அமைச்சராக இருந்தபோது, சுமார் 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் அவரது மருமகனுக்கு கிடைத்துள்ளது.

டெண்டர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது ஒப்பந்தக்காரர்களுக்கு ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் ரூ. 30-57 லட்சம் வழங்கப்படுகிறது. ஒப்பந்தத் தொகையில் 60-65 சதவிகிதமானது, ஒப்பந்தப் பணியாளர்களுக்கு வேலை நடைபெறும் நேரத்தில் வழங்கப்படுகிறது. மீதமிருக்கும் 35-40 சதவிகித தொகை, சம பாகங்களில் ஐந்து வருட பராமரிப்புக்காக அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு டவரிலும் தலா 5,000 லிட்டர் கொண்ட இரண்டு பிளாஸ்டிக் டேங்கை அமைக்க வேண்டும். அதற்கு, போர்வேல் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணியை ஆப்ரேட்டர்கள் மேற்கொள்ள வேண்டும். அடுத்ததாக, வார்டில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்குவது ஆகியவை ஒப்பந்தக்காரர்களின் பணி ஆகும்.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள ஒரு புரோஜக்டை தவிர அனைத்து திட்டங்களின் பணிகளும் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றன.

யார் யாருக்கு எவ்வளவு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. முன்னாள் மாநில செயலாளர் அனில் சிங்கின் மகன், மருமகள் மற்றும் நெருக்கமானவர்கள் நடத்தும் Alectra Infrastate Ltd and Fadle Chem Pvt Ltd ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு 80 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.

2. முன்னாள் PHED அமைச்சரும், பாஜக சட்டமன்ற உறுப்பினரான வினோத் நாராயண் ஜாவின் மருமகன் சுனில் குமார் ஜாவுக்கு ரூபாய் 3.5 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

3. குஷி நிறுவனத்திற்கு ரூபாய் 400 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தில், மூத்த ஜேடியு தலைவர் தீபக் குமாரும், அவரது உறவினர்கள் பாட்னர்களாக உள்ளனர். ஆனால், இந்த டெண்டரில் முறைகேடு நடந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், இந்நிறுவனத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

4. ஆர்ஜேடி மாநில பொதுச் செயலாளர் ராஜீவ் கமல் என்ற ரிங்கு சிங்கிற்கு, ஜாமுவியில் ரூபாய் 4.5 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை PHED வழங்கியுள்ளது.

5. பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜன் திவாரிக்கு சொந்தமான ஜெய் ஸ்ரீ ஷ்யாம் நிறுவனத்திற்கு ரூபாய் 17 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

6. பாஜக முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் மனோஜ் குப்தாவுக்கு சொந்தமான ஆர்.எம் நிறுவனத்திற்கு ரூபாய் 23 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளன.

7. சமஸ்திபூரில் ஜேடியு ஈபிசி பிரிவின் தலைவர் தர்மேந்திர குமார் சாஹ்-க்கு சொந்தமான நிறுவனத்திற்கு 4 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

8. காங்கிரஸை சேர்ந்த அகமது அக்தருக்கு, 2019-20இல் இரண்டு வார்டுகளில் மொத்தம் ரூ .85 லட்சம் ஒப்பந்தங்கள் கிடைத்தன. உள்ளூர் வாசி ஜனார்தனுக்கு சொந்தமான ஜேபி என்டர்பிரைசஸில் அக்தர் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

9. ஷேக்புராவில் PHED அலுவலக உதவியாளர் ரவீந்திர சிங்கின் மகன் ரிஷு சிங்குக்கு 2019-20 இல் மொத்தம் 1 கோடி ரூபாய் ஒப்பந்தங்கள் கிடைத்தன.

10. ஜேடியு கட்சியை சேர்ந்த முகமது சர்பராஸின் சகோதரர் முகமது காலித்துக்கு 2019-20இல் மொத்தம் 3.6 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளன.

11. ஜேடியுவை சேர்ந்த அலோக்குமாரின் உறவினர் பிந்து குமாருக்கு 2019-20 இல் 45 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

12. கோபால்கஞ்சில் முன்னாள் ஜேடியு தலைவர் ராமஷீஷ் சிங்கின் மகன் முகேஷ் சிங்குக்கு 1.3 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளன. இந்த திட்டத்துக்கான பணி 2016-17 இல் கிடைத்தாகவும், நீண்ட நாள்கள் முன்னரே முடித்துவிட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

Bihar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment