ஒரு வயதான ஆர்.எஸ்.எஸ் தொண்டர் கோவிட் மருத்துவமனையில் தனது படுக்கையை ஒரு இளைஞருக்கு விட்டுக் கொடுத்தார் என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலானது.
மூன்று நாட்கள் கழித்து வீட்டில் இறந்த 85 வயதான நாராயணராவ் தபாட்கர், உண்மயில் மருத்துவ ஆலோசனைக்கு எதிராக அவர் டிஸ்சார்ஜ் செய்துகொண்டு வீட்டுக்கு சென்றார் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால், அவர் தனது படுக்கையை வேறொருவருக்காக விட்டுக்கொடுதார் என்ற செய்தியில் எந்த தெளிவும் இல்லை.
செவ்வாய்க்கிழமை அன்று ஆர்.எஸ்.எஸ்-ஆல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் அல்லது செய்தியில், “இந்திரா காந்தி ருக்னலே மருத்துவமனையில் தபாட்கர் ஒரு படுக்கையைப் பெற்றார். மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது, அவரா மூச்சு விட முடியாத நிலையில் இருந்தார். மேலும், அவர் மருத்துவமனையில் சேருவதற்கான அனைத்து நடைமுறைகளும் முடிந்துவிட்டன. அப்போதுதான் தபாட்கர் ஒரு பெண் கதறி அழுததைக் கண்டார். தனது 40 வயது கணவரை சேர்த்துக்கொண்டு அவருக்கு ஆக்ஸிஜன் வழங்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். அவளுடைய குழந்தைகளும் அழுது கொண்டிருந்தார்கள். தபாட்கர் மருத்துவ ஊழியர்களிடம் தனக்கு 85 வயதாகிவிட்டது. தனது வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டதாகவும் இங்கே படுக்கைகள் கிடைக்கவில்லை என்றால், அவருக்காக ஒதுக்கப்பட்ட படுக்கை யாருடைய குடும்பத்திற்குத் தேவைப்படுகிறதோ அவருக்கு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கை கூறியிருப்பதாவது: “தபாட்கரின் மருமகனும் மருத்துவர்களும் அவருக்கு சிகிச்சையளிக்க வேண்டியது அவசியம் என்றும் அவருக்கு மற்றொரு படுக்கை கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் அவருக்கு விளக்க முயன்றனர். ஆனாலும், தபாட்கர் தனது மகளை அழைத்து, அவர் வீட்டுக்கு செல்வதாகவும் அது சரியான செயல் என்றும் கூறினார். அவள் ஒரு தந்தையின் மகளாக, அவருடைய உணர்ச்சிகளை புரிந்துகொண்டாள். தபாட்கர் ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்திட்டுவிட்டு வீடு திரும்பினார். அவர் அங்கே மூன்று நாட்களுக்குப் பிறகு இறந்தார்.” என்று தெரிவித்துள்ளது.
இருப்பினும், நாக்பூர் மாநகராட்சியால் நடத்தப்படும் மருத்துவமனையின் மருத்துவர் ஷீலு சிமுர்கர் கூறுகையில், “ஏப்ரல் 22ம் தேதி மாலை 5.55 மணிக்கு தபாட்கர் அனுமதிக்கப்பட்டார். நாங்கள் அவரை விபத்து வார்டில் ஆக்ஸிஜன் அளிக்கப்படுகிற படுக்கையில் வைத்தோம். அவருடன் இருந்த உறவினர்களிடம், அவரது நிலை மோசமடைந்துவிட்டால் அவரை உயர் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டியிருக்கும் என்று நாங்கள் கூறினோம். அவர்கள் ஒப்புக்கொண்டு போனார்கள். இரவு 7.55 மணிக்கு அவர்கள் திரும்பி வந்து அவரை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என்று கோரினார்கள். அதற்கு காரணம் என்ன என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், அவரை உயர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தினோம். அவரது மருமகன் அமோல் பாச்போர் ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்திட்ட பிறகு, மருத்துவ ஆலோசனைக்கு எதிராக நாங்கள் அவருக்கு டிஸ்சார்ஜ் கொடுத்தோம்” என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் உலாவரும் செய்தி பற்றி கேட்டதற்கு, சிமுர்கர், “அன்றைய தினம் பணியில் இருந்த எங்கள் ஊழியர்கள் இதுபோன்ற எந்தவொரு சம்பவத்தையும் பார்க்கவில்லை” என்று கூறினார்.
110 கோவிட் படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் 92 கோவிட் தொற்று செயலில் உள்ள நோயாளிகள் படுக்கைகள் உள்ளன. மீதமுள்ளவை தீவிர சிகிச்சை பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அப்போது மருத்துவமனையில் வேறு எந்த படுக்கையும் காலியாக இல்லையா என்று கேட்டதற்கு, சிமுர்கர், “எங்களிடம் குறைந்தது 4 முதல் 5 படுக்கைகள் காலியாக இருந்தன.” என்று கூறினார்.
தபாட்கரின் மருமகன் அமோல் பாச்போர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “நான் பேசும் நிலையில் இல்லை, ஏனென்றால் நானும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தேன். என்ன நடந்தது என்பது சரிதான். அவர் இயல்பாகவே உதவும் மனம்கொண்ட மனிதர் அதில் இரண்டு கருத்துக்கள் இல்லை. ஆனால், இப்போது பேச என்ன இருக்கிறது? அவர் இறந்து 4 நாட்கள் ஆகிவிட்டது. அதில் என்ன இருக்கிறது, அதில் உண்மை இருக்கிறது. அவ்வளவுதான் நான் சொல்ல முடியும். நான் மேலும் பேச தயாராக இல்லை.” என்று கூறினார்.
அவரை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தீர்களா என்று கேட்டதற்கு, பதில் அளித்த பாச்போர், “நாங்கள் நிறைய மருத்துவமனைகளைத் தேடினோம். இதுதான் நாங்கள் ஒரு படுக்கையைக் கண்டோம். ஆனால், என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் அனைவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது என்பதால் நான் அவரை என் மூத்த சக சகோதரரிடம் அழைத்துச் சென்றேன். நான் உங்களுக்கு வேறு எதுவும் சொல்லத் தேவையில்லை.” என்று கூறினார்.
அவரது மாமனார் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு அழுத்தம் இருந்ததா என்று கேட்டதற்கு, பாச்போர் மீண்டும், “நான் பேசும் நிலையில் இல்லை என்று சொன்னேன். நாம் அதைப் பற்றி பிறகு பேசுவோம்.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.