scorecardresearch

உயர்சாதியினர் பானையில் இருந்து தண்ணீர் குடித்த சிறுவன்:  அடித்தே கொன்ற ஆசிரியர்!

உயர்சாதியினர் தண்ணீர் குடிகும் பானையிலிருந்து தண்ணீர் அருந்தியதால், மாணவரை தாக்கிய ஆசியர். இந்நிலையில் மாணவர் மரணடைந்த நிலையில் ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உயர்சாதியினர் பானையில் இருந்து தண்ணீர் குடித்த சிறுவன்:  அடித்தே கொன்ற ஆசிரியர்!

உயர்சாதியினர் தண்ணீர் குடிகும் பானையிலிருந்து தண்ணீர் அருந்தியதால், மாணவரை தாக்கிய ஆசியர். இந்நிலையில் மாணவர் மரணடைந்த நிலையில் ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராஜாஸ்தானில் உள்ள ஜல்ஹோர் மாவட்டத்தை சேர்ந்தவர் தேவராம் மெக்வல். இவரது 9 வயது மகன் இந்திர குமார், சரஸ்வதி வித்திய மந்திர் என்ற பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் உயர்சதியினருக்கும் தண்ணீர் வைக்கும் பானையிலிருந்து தண்ணீர் எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் சயில் சிங் இவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் அக்குழந்தையின் காதுகள் மற்றும் கண்கள் அதிகமாக காயமடைந்துள்ளது. இந்நிலையில் அவர் ஜலோர், உதய்பூர் ஆகிய மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில் அலகாபாத் மருத்துவனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்வீட்டில், “ ஆசிரியர் தாக்கியதாலே இந்த குழந்தை மரணமடைந்துள்ளார். எஸ்சி/எஸ்டி சட்டத்தில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை காவல்துறை கைது செய்திருக்கிறது. இது தொடர்பான விசாரணையை வேகப்படுத்தி உள்ளோம். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரண வழங்க உள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாஜகவின் அம்மாநிலத் தலைவர்  சதீஷ் பூனியா ராஜஸ்தான் அரசை விமர்சித்துள்ளார். விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.   

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: 9 yr old dalit boy dies teacher arrested as kin allege assault for touching upper caste water