/tamil-ie/media/media_files/uploads/2023/04/karnataka-congress-veteran.jpg)
லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முதுபெரும் தலைவர் சிவசங்கரப்பா.
காங்கிரஸின் மூத்தத் தலைவரான சிவசங்கரப்பா அகில இந்திய வீரசைவ மகாசபாவின் தலைவர் ஆவார். 92 வயதான இவர், இன்றைய காலகட்டத்தில் நாட்டின் வயதான எம்.எல்.ஏ. ஆவார்.
பிரபல தொழில் அதிபரான இவர், 1969ல் அரசியல் பணியை தொடர்ந்தார். தேவநாகரி மாநகராட்சி தலைவர், 5 முறை எம்.எல்.ஏ. ஒருமுறை மக்களவை உறுப்பினர் என தேர்வாகியுள்ளார். அரிதாக 1999 மக்களவை தேர்தலில் ஒருமுறை தோல்வியை தழுவினார்.
மேலும் இவர் பாபுஜி கல்வி நிறுவனங்களின் தலைவராகவும் உள்ளார். இந்த நிறுவனத்தின் கீழ் 54 கல்லூரிகள் உள்ளன. காங்கிரஸின் மூத்தத் தலைவரான சிவசங்கரப்பாவுக்கு இந்தத் தேர்தலில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
மேலும் திங்கள்கிழமை (ஏப்.17) பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி முன்னாள் முதல் அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸில் இணைந்தார்.
அவரும் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இதற்கு முன்பு சிவசங்கரப்பாவிடம், ஷெட்டர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
கர்நாடகத்தில் மே10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இங்கு லிங்காயத் சமூக மக்களின் வாக்குகளை கவர காங்கிரஸ், பாஜக இடையே பெரும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் 40க்கும் மேற்பட்ட லிங்காயத் வேட்பாளர்களை காங்கிரஸிம், 50ம் மேற்பட்ட லிங்காயத் வேட்பாளர்களை பா.ஜ.க.வும் களம் இறக்கியுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.