scorecardresearch

93 வயதில் முதுகலைப் பட்டம்: நம்மால் ஏன் முடியாமல் போனது?

இக்னோவில் வயது தடை இல்லை என்று தெரிய வந்தது.  பின்னர், நான் பொது நிர்வாகத்தில் இளங்கலை படிப்புக்கு சேர்ந்தேன். அதை முடிக்க உயிருடன் இருப்பேனா என்று கூட தெரியவில்லை.

Sivusubramanian IGNOU 93 year old master Degree

குடும்பப் பொறுப்புகள் காரணமாக கைவிடப்பட்ட எனது படிப்பிற்கான விடை 87 வயதில் இறுதியாக கிடைத்தது,” என்று இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 93 வயது  சி.ஐ.சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.

சிவசுப்பிரமணியன் தனது 93 ஆவது வயதில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அவர் அறிவிற்கான ஆர்வத்தை பாராட்டிய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால், இவரை ’90 வயது  இளைஞர்’ என்று பாராட்டினர்.

வாழ்க்கை பயணம்:   1940 களில் பள்ளி படிப்பை முடித்தவுடன், நான் கல்லூரிக்குச் செல்ல விரும்பினேன். ஆனால், இதற்காக நான் திருச்சி (அ) சென்னைக்கு பயணப்பட வேண்டும். நோயுற்ற பெற்றோரை விடுத்து படிப்பதற்காக தொலை தூரம் செல்ல வேண்டாம் என்று எனது உறவினர்கள் அறிவுறுத்தினார்கள். பிறகு, வேலை கிடைத்தது, வேலை செய்யத் தொடங்கிவிட்டேன்,”என்றார்.

பின்னர், குடும்பம் டெல்லிக்கு மாறியது. 1940 களில் வர்த்தக துறை அமைச்சகத்தில் எழுத்தராக வேலை கிடைத்தது. பல ஆண்டுகளாக, பல்வேறு துறைத் தேர்வுகளில் தேர்ச்சியடைந்து, இறுதியாக 58- வது வயதில் (1986 ஆம் ஆண்டு) அமைச்சகத்தில் இருந்து இயக்குநராக ஓய்வு பெற்றேன்.  ஆனால், பட்டம் பெறவில்லை என்ற எண்ணம் அடிமனதில் ஆழமாய் இருந்ததது.

உண்மை சொல்ல வேண்டும் என்றால், நான் பணி செய்து கொண்டிருந்த காலத்தில், ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு திட்டத்தின் கீழ் வேலைசெய்ய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் பட்டதாரி இல்லாததால் என்னால் அதை செய்ய முடியவில்லை.

நான் அமைச்சகத்தில் பணி புரிந்த  காலத்தில், டெல்லி பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி குறித்து விசாரித்தேன், ஆனால் இடமாற்றம் செய்யப்பட்டதால், அவற்றைத் தொடர முடியவில்லை,” என்றார்.

ஓய்வு பெற்ற பின்பும், குடும்பச் சூழல் காரணமாக எனது படிப்பைத் தொடர முடியவில்லை. எனக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அவர்கள் அனைவரும் மதிப்புமிக்க பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்.

“எனது பேரக்குழந்தைகள் கூட படிப்பை முடித்துவிட்டார்கள், அவர்களில் சிலர் திருமணமானவர்கள். எனது பேத்திகளில் ஒருவர் அமெரிக்காவில் மருத்துவம் படித்து வருகிறார்,”என்றும் தெரிவித்தார்.

“என் குழந்தைக்குள் பள்ளி காலங்களில் இருந்த போதே நான் அவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணிதத்தை கற்பித்தேன், ஆனால் அப்போதும் என்னால் பட்டப்படிப்பைத் தொடர முடியவில்லை,” என்றார்.

அசாதாரண திருப்பம்:   எனக்கு 87 வயதாக இருந்தபோது என் மனைவி படுத்த படுக்கையாகி விட்டார். நான் நாள் முழுவதும் அவரோடுதான் இருந்தேன்.

“ஒரு நாள், எனது மனைவியின் பிசியோதெரபிஸ்ட், ஒரு பாடநெறிக்கான விண்ணப்பத்தை வாங்கவதற்கு இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்றும், அதனால் அன்று மட்டும் விரைவாக செல்ல வேண்டும் என்றும் எங்களிடம் சொன்னார். நானும் விண்ணப்பிக்க முடியுமா என்று அவரிடம் கேட்டேன்.

இக்னோவில் வயது தடை இல்லை என்று தெரிய வந்தது.  பின்னர், நான் பொது நிர்வாகத்தில் இளங்கலை படிப்புக்கு சேர்ந்தேன். நான் அதை முடிக்க நீண்ட காலம் உயிருடன் இருப்பேனா என்று கூட அப்போது எனக்கு தெரியவில்லை.  எனது பட்டப்படிப்பை முடித்ததும், முதுநிலை பட்டப்படிப்பில் சேர்ந்தேன்,”என்றார்.

அதிகாலை 5 மணிக்கு எழுந்து புத்தகங்களை வாசிப்பதே கடந்த ஆறு ஆண்டுகளமாக எனது வழக்கமாக இருந்தது  .

“நான் அதிகாலையில் படிப்பேன், இதனால் நாள் முழுவதும் மற்ற செயல்களுக்கு நேரம் ஒதுக்குவேன். நான் ஒரு விளையாட்டு ஆர்வலர்,விளையாட்டுகளைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும்” என்றார்.

அவரது கையெழுத்து வயதின் காரணமாக தெளிவற்று போனதால், தனது மகள் மூலம் தேர்வை எழுதியிருக்கிறார்.

நான் எனது பட்டப்படிப்பை முடித்து, ஒரு வருடத்திற்குப் பிறகு தான் பட்டத்தைப் பெற்றேன். அந்த காலகட்டத்தில், என் மனைவி வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருந்தார். நான் எனது பட்டத்தை அவரிடம்  ஒப்படைத்துவிட்டு, ‘இறுதியாக, உங்கள் கணவர் ஒரு பட்டதாரி’ என்று சொன்னேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு என் மனைவி கடைசி மூச்சை சுவாசித்தார், ”என்றார்.

இப்போது அவரது திட்டங்களைப் பற்றி கேட்டபோது,“நான் எம்ஃபிலைப் பின்தொடர விரும்பினேன், ஆனால் என் மகள்களில் ஒருவர்,‘ எம்ஃபில் சில காலிப் பணியிடங்களே உள்ளன. அதற்கு நீங்கள் பதிவு செய்து ஒரு தகுதியான வேட்பாளரின் இடத்தைப் பறிக்கப் போகிறீர்களா? என்று தன் மகள் கூறியதாக பதிலளித்தார்.

நான் இன்னொரு முதுநிலை படிப்பைத் தொடர முடியுமா என்று யோசித்து வருகிறேன். இதற்கிடையில், சில வலைத்தளங்கள் வழங்கும் குறுகிய கால படிப்புகள் உள்ளன என்பதை நான் அறிந்திருக்கிறேன், எனவே அவற்றில் ஒன்றை நான் தேர்வு செய்வேன், ”என்றும் அவர் தெரிவித்தார்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: 93 year old ci sivasubramanian gets masters degree from ignou