Ukraine seeks to move UNGA : 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகளின் சபையில் இன்று காலை நடைபெற உள்ள சிறப்புக் கூட்டத்தில் விவாதத்திற்கு வர உள்ளது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் விவகாரம்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திய நிலையில், கீவ் அதிகாரிகள் இந்த விவகாரத்தை ஐ.நா. பொதுசபைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதத்திற்கு வைக்கப்பட்டு, பெறப்படும் வாக்குகள் அடிப்படையில் ஐ.நா. பொதுசபைக்கு எடுத்துச் செல்லப்படும்.
ரஷ்யா – உக்ரைன் போர் இந்திய பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
பொதுசபைக்கு எடுத்துச் செல்லும் முன் பாதுகாப்பு கவுன்சிலில் வைக்கப்படும் இந்த தீர்மானத்தில் 15 உறுப்பினர்கள் வாக்களிக்க முடியும். பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நிரந்திர உறுப்பினர்கள் இதில் தங்களின் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த இயலாது. 9 வாக்குகளை பெறும் பட்சத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பொது சபையின் அவசர கால கூட்டத் தொடருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த கூட்டம் நாளை காலை நடைபெறும்.
இது வரை 10 அவசர கூட்டத்தொடர் ஐ.நா. பொதுசபையில் நடைபெற்றுள்ளது. சனிக்கிழமை அன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா உக்ரைன் மீதான படையெடுப்பு குறித்த தீர்மானத்தில் வாக்களிக்க மறுத்துவிட்டது இந்தியா. ரஷ்யாவால் வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்பட்டது. இதே நிலை இன்றும் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவால் வழி நடத்தப்படும் மேற்கத்திய நாடுகளின் அணி மற்றும் ரஷ்யாவுக்கு இடையே சமநிலையை பின்பற்ற முயற்சி மேற்கொள்ளப்படுவதால் இந்தியாவும் சீனாவும் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். கடந்த மாதம் உக்ரைன் விவகாரம் குறித்து விவாதம் நடத்தலாமா என்ற கேள்விக்கும் வாக்களிக்க மறுத்துவிட்டது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு கவுன்சிலில் வாக்களிக்க மறுத்தாலும் கூட மிகவும் கடுமையான வாதத்தை ரஷ்யாவை நோக்கி முன்வைத்து பிராந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, ஐ.நா. மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து பேசியது இந்தியா.
ஐ.நாவுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி சனிக்கிழமை அன்று பேசிய போது, சமகால உலகளாவிய ஒழுங்கானது ஐ.நாவின் சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் பிராந்திய நாடுகளின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு மீதான மரியாதையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு இருக்கும் அனைத்து உறுப்பு நாடுகளும் இக்கொள்கைகளை ஆக்கப்பூர்வமான வழிகளில் கண்டுபிடிப்பதில் மதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
வெடித்து சிதறிய செர்னோபில் அணு உலையை ரஷ்ய ராணுவத்தினர் கைப்பற்ற காரணம் என்ன?
சீனாவும் தன்னுடைய வாக்கை செலுத்த மறுத்த நிலையில், இந்தியா போன்றே கடுமையான வாதத்தை முன்வைத்தது.
ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி ஸாங் ஜூன், “அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு மதிக்கப்படுவ வேண்டும். ஐ.நா சாசனத்தின் கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் நிலை நிறுத்தப்பட வேண்டும். மற்ற நாடுகளின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் மற்றொரு நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமையக் கூடாது. உக்ரைன் மேற்கத்திய நாடுகளுக்கும் கிழக்கத்திய நாடுகளுக்கும் ஒரு இணைப்புப் பாலமாய் செயல்பட வேண்டும்” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.