Advertisment

குஜராத்: இவரா ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளர்? 'அர்பன் நக்ஸல்' என பாஜக விமர்சனம்!

குஜராத் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு வார்த்தை கூறினால் கூட 48 மணி நேரத்தில் மாநில முதலமைச்சசர் பதில் அளிக்கிறார். இது ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியை காட்டுகிறது என மாநில ஆம் ஆத்மி கட்சியினர் கூறுகின்றனர்.

author-image
WebDesk
New Update
A familiar name has cropped up as BJP takes on AAP in Gujarat

சமூக ஆர்வலர் மேதா பட்கர்

அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள குஜராத்தில் ஆம் ஆத்மி தீவிரமாக வளர்ந்துவருகிறது. ஆம் ஆத்மியை முறியடிக்கும் முயற்சியில் பாரதிய ஜனதா இறங்கியுள்ளது.
மறுபுறம் ஆம் ஆத்மியின் அரசியல் ஆயுதமாக மேதா பட்கர் திகழ்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Advertisment

பாரதிய ஜனதா அவர் மீது தற்போதே தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. ஏற்கனவே பாரதிய ஜனதாவுக்கும் சமூக ஆர்வலரான மேதா பட்கருக்கும் ஒத்துவராது.
பாரதிய ஜனதாவின் சாதனையாக பேசப்படும் நர்மதா சர்தார் சரோவர் அணை திட்டம் வரை மேதா பட்கர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

முன்னதாக 2002 குஜராத் கலவரம் அதன்பின்னர் நடந்த அமைதி கூட்டத்தின் போதும் மேதா பட்கர் தாக்கப்பட்டார். இந்த வழக்கில் பாரதிய ஜனதாவின் மூத்தத் தலைவர்கள் இருவரின் மீது தற்போதும் முதல் தகவல் அறிக்கையில் பெயர் உள்ளது. இது தொடர்பாக வழக்கு விசாரணை இன்றும் நடந்துவருகிறது.
2006ஆம் ஆண்டு குஜராத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தபோது, சர்தார் சரோவர் அணையின் உயரத்தை அதிகரிக்கும் முடிவுக்கு எதிராக போராட்டம் அறிவித்தார்.

அணை திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். இந்த நிலையில் அண்மையில் குஜராத் முதலமைச்சர் பூபேந்தர் படேல், ஆக.28ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், “மேதா பட்கரை அர்பன் நக்ஸல் என வர்ணித்தார்.

மேலும் பல ஆண்டுகளாக மக்கள் குடிநீருக்காக தவித்ததையும், இந்தத் திட்டத்தின் மூலம் அம்மக்களுக்கு குடிநீர் கிடைத்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.
மேதா பட்கர் பெயரை குறிப்பிடாமல் பேசிய அமித் ஷா, “சிலர் பின்வாசல் வழியாக நுழைய முயற்சிக்கின்றனர். குஜராத் நலனுக்கு எதிரானவர்களை நாங்கள் விரும்புவதில்லை” என்றார்.
இதே பாணியை குஜராத் பாரதிய ஜனதாவினரும் கடைப்பிடிக்கின்றனர். மேதா பட்கர் குஜராத் வளர்ச்சி அரசியலுக்கு எதிரானவர் என்ற பரப்புரையை செய்கின்றனர்.

ஏற்கனவே மேதா பட்கரும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து செயல்பட்டார். 2014 மக்களவை தேர்தலில் மும்பையில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
தற்போது அவர் மீண்டும் ஆம் ஆத்மி கட்சியில் இணையுள்ளார் எனக் கூறுகின்றனர். ஆனால் அதையெல்லாம் மாநில ஆம் ஆத்மி கட்சியினர் நிராகரித்தனர்.

இதுகுறித்து ஆம் ஆத்மி தலைவர் ஒருவர் கூறுகையில், “மேதா பட்கருக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. ஆம் ஆத்மி கட்சிக்கு அவப்பெயரை ஏற்படு்த்தும் முயற்சியில் பாரதிய ஜனதா கட்சியினர் இந்தப் பரப்புரையை முன்னெடுக்கின்றனர்.
இது மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி. இந்த விஷயத்தில் பாரதிய ஜனதாவின் பதற்றம் தெரிகிறது. மாநிலத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் எந்தப் பிரச்னையை எழுப்பினாலும், மாநில அரசு 48 மணி நேரத்தில் முடிவெடுக்கிறது” என்றார்.

பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் பேசுகையில், “மாநிலத்தில் உள்ள திட்டங்களில் மக்களுக்கு சர்தார் சரோவர் அணை திட்டம் முக்கியமானது. இந்தத் திட்டத்தில் மாநில அரசுக்கு தொடர்ந்து பிரச்னைகள் கொடுத்தவர் மேதா பட்கர்.
இது மக்களுக்கு நன்கு தெரியும். அந்த வகையில் மேதா பட்கர் ஆம் ஆத்மி சார்பாக போட்டியிடும்போது அது பாரதிய ஜனதாவுக்கு வாய்ப்பாக அமையும் என்றார்.

மேதா பட்கர் தேர்தல் தோல்விக்கு பிறகு 2015இல் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினார். தறபோது ராகுல் காந்தி புதன்கிழமை (செப்.7) தொடங்கிய கன்னியாகுமரி - காஷ்மீர் ஒற்றுமை பாத யாத்திரைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Aam Aadmi Party Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment