Advertisment

கூலி தொழிலாளியாக வேலை செய்தவர், ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டி

A farm laborer Contest as JNU’s presidential Candidate: விவசாய கூலி வேலை மற்றும் கேஸ் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்த ஒடிஷாவைச் சேர்ந்த ஆய்வு மாணவர் ஜிதேந்திர சுனா இன்று டெல்லி ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் பதவிக்கு பாப்சா சார்பில் போட்டியிடுகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jnu presidential elections, jnu elections, jnu, elections in jnu, jitendra suna, ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் தேர்தல், ஜிதேந்திர சுனா, jitendra suna jnu, jnu elections contestants, delhi city news, jnu news,

jnu presidential elections, jnu elections, jnu, elections in jnu, jitendra suna, ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் தேர்தல், ஜிதேந்திர சுனா, jitendra suna jnu, jnu elections contestants, delhi city news, jnu news,

ஆரண்யா சங்கர்

Advertisment

A farm laborer Contest in JNU’s presidential Election: 2009 ஆம் ஆண்டில், ஜிதேந்திர சுனா (29) தலைநகரில் இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (ஐ.ஜி.எல்) உதவியாளராக வேலை செய்தார். அதில், எரிவாயு குழாய் பொருத்துதல், அடுப்புகளை சரிசெய்தல் மற்றும் குழாய் வெடித்தால் சாலைகள் தோண்டுவது உள்ளிட்ட வேலைகளை செய்துள்ளார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, பிர்சா அம்பேத்கர் புலே மாணவர் சங்கத்தின் (பாப்சா) தலித் பிஎச்.டி மாணவராக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க (ஜே.என்.யு.எஸ்.யு) தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

ஒடிசாவின் பின்தங்கிய கலஹந்தி மாவட்டத்தில் உள்ள போர்கெலா கிராமத்தில் பிறந்த சுனா, வாழ்க்கையின் தொடக்கத்திலேயே உடல் உழைப்புக்கு அறிமுகமானார். அவரது தாயார் காய்கறி விற்பனையாளராக இருந்தார். அவரது தந்தை 1960 ஆம் ஆண்டு நில சீர்திருத்தச் சட்டத்தின் போது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தை பன்படுத்தி விவசாயியாக வேலை செய்து வந்தார். அந்த நிலமும் இப்போது அடமானத்தின் கீழ் உள்ளது.

“நான் எட்டாம் வகுப்பில் இருந்தபோது என் அம்மா இறந்துவிட்டார். நான் மற்றவர்களின் நெல் வயல்களை விதைக்க ஆரம்பித்தேன், இதற்காக நான் ஒரு நாளைக்கு சுமார் 30-40 ரூபாய் பெறுவேன். எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏவின் ஒரு பகுதியாக, சாலைகள் மற்றும் குளங்களையும் தோண்டினேன், அதற்காக ஒரு நாளைக்கு ரூ .100-150 கிடைக்கும், ”என்று சுனா கூறினார். சுனாவுக்கு ஆறு பேர் உடன் பிறந்தவர்கள் உள்ளனர்.

சுனா ஒரு தொழிலாளியாக வேலை செய்யும் போது தொடர்ந்து பள்ளிக்குச் சென்றார். பள்ளி முடிந்ததும் டெல்லிக்குச் செல்வதற்கான முடிவு முற்றிலும் பொருளாதாரம் சார்ந்த ஒன்று . அவர்களுடைய வீட்டைக் கட்டி முடிக்க அவர் சம்பாதிக்க வேண்டியிருந்தது. அவரது சகோதரர் ஐ.ஜி.எல் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் அவர் அவருடன் வேலைக்கு சென்றார்.

சுனா தனது சாதி அடையாளத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொண்ட காலமும் இதுதான். “நாங்கள் எப்படி வித்தியாசமாக நடத்தப்பட்டோம், தனியாக சாப்பிட வைக்கப்பட்டோம். சேரிகளில் வாழ்கிறோம் என்பதை சிறுவயதிலிருந்தே நான் கவனித்தேன். எனது சகோதரரிடம் அவருடைய சக ஊழியர்கள் சாதி பட்டப் பெயரைக் கேட்டு கேள்வி எழுப்பியபோது அந்த உணர்வு இன்னும் வலுவடைந்தது. ஆனால், அவர் அதற்கு பதிலளிக்கவில்லை” என்றார் சுனா.

ஒரு உதவியாளராக அவருக்கு கிடைத்த மாதம் ரூ.3,500 அவர் நகரத்தில் ஜீவிப்பதற்கு போதுமானதாக இல்லை. அதனால், பணம் அவரை வீட்டுக்கு திரும்ப அனுப்பியது. ஆகையால், சுனா திரும்ப ஊருக்குச் சென்று தனது பட்டப் படிப்பை முடிக்க முடிவு செய்தார்.

சுனாவின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் வந்தது. அவரது பட்டப் படிப்புக்குப் பிறகு, நாக்பூரில் உள்ள ஒரு நிறுவனம் பற்றி ஒரு நண்பர் அவரிடம் இலவச யு.பி.எஸ்.சி பயிற்சியை வழங்குவதாகக் கூறினார்.

“நான் நாக்பூரை அடைந்தபோது, அது அம்பேத்கரிஸம் மற்றும் பௌத்தம் பற்றி 10 மாத படிப்பு என்பதை உணர்ந்தேன். அங்குதான் நான் சாதி மற்றும் தீண்டாமை பற்றிய புரிதலை வளர்த்துக் கொண்டேன்… எனவே வரலாற்றைப் படித்து எங்கள் (தலித்) வரலாற்றை எழுத முடிவு செய்தேன்” என்றார் சுனா.

சுனா இந்த நிறுவனத்தில்தான் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்து ஜே.என்.யு-வில் எம்.ஏ நுழைவுத் தேர்வை எழுத முடிவு செய்தார். அவர் 2013 -இல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். மேலும், சமூக விலக்கு மற்றும் உள்ளடக்கிய கொள்கை ஆய்வு மையத்திலிருந்து வரலாற்றில் எம்.ஏ. மற்றும் எம்ஃபில் முடித்தார். தற்போது அதே மையத்தில் பி.எச்.டி மாணவராக சேர்ந்துள்ளார். மேலும், தனது பி.எச்.டி ஆய்வை ‘அடையாளங்களின் வரலாறு மற்றும் விலக்கு; அம்பேத்கர் மற்றும் விளிம்புநிலை மக்கள் என்ற தலைப்பில் எழுதிக்கொண்டிருக்கிறார்.

பாப்சா அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் சுனாவும் ஒருவர். "ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக எவ்வாறு ஜனநாயக நிறுவனங்களை அழிக்கின்றன என்பதை நாங்கள் காண்கிறோம் ... இடதுசாரி தலைமையிலான ஜே.என்.யு. மாணவர் சங்கம் அதை எதிர்த்து நிற்பதில் தோற்றுவிட்டன”என்று சுனா கூறினார்.

Delhi Odisha Jnu University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment