Vel festival in Bengal: மேற்கு வங்க மாவட்டம் ஹூக்லியில் அமைந்திருக்கும் பந்தேல் பகுதியில் நடைப்பெற்ற வேல் திருவிழாவின் போது அங்குள்ள தமிழ் வம்சாவளியினர் அலகு குத்தி நேற்றிக் கடனை நிறைவேற்றினார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் புகைப்படக் கலைஞர் ஷஷி கோஷின் மெய் சிலிர்க்க வைக்கும் புகைப்படத் தொகுப்பு இங்கே
Advertisment
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் வாரம் இந்த விழாவை வெகு விமர்சையாக பெங்காலில் வசிக்கும் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். Express photo by Shashi Ghosh வருடாந்திர சீத்தலா பூஜை நடைபெற்று முடிந்த பிறகு பந்தேலில் அமைந்திருக்கும் ஓலைச் சாண்டி கோவிலில் இந்த வேல் விழா கொண்டாடப்படுகிறது. Express photo by Shashi Ghosh திருவிழா துவங்கும் போது குளத்தில் நீராடும் பக்தர்கள் தங்களின் நாக்கு அல்லது கன்னங்களில் அலகு குத்திக் கொண்டு கோவிலுக்கு நடந்து செல்கின்றனர். (Express photo by Shashi Ghosh)
Advertisment
Advertisement
அலகு குத்திக் கொண்டு வீதியில் வரும் பக்தர்களின் கால்களில் விழுந்தும், அவர்களின் கால்களில் நீரை ஊற்றியும், அவர்களின் ஆசியைப் பெற்றுக் கொண்டனர் அங்குள்ள மக்கள். (Express photo by Shashi Ghosh) இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும், தமிழகம் அல்லாத பிற இந்தியா மாநிலங்களிலும் தமிழ் வம்சாவளியினர் முருக கடவுளை தொடர்ந்து வணங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பதையே இந்த பண்டிகை காட்டுகிறது (Express photo by Shashi Ghosh)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil