/indian-express-tamil/media/media_files/DaZu0f1vSx3lRUhH6dLZ.jpg)
புதுச்சேரியில் சிறுவனை ஓட ஓட விரட்டி தாக்கிய 15 பேர் கும்பல்; சிசிடிவி அதிர்ச்சி காட்சி
புதுச்சேரியில் சிறுவனை ஓட ஓட விரட்டி 15 பேர் கும்பல் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி உருளையன்பேட்டை முத்தமிழ் நகரை சேர்ந்தவர் செல்வி (45). இவரது 15 வயது மதிக்கத்தக்க மகன் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது கத்தி, தடி உள்ளிட்ட ஆயுதங்களுடன் திடீரென அங்கு வந்த 15 பேர் கும்பல், சிறுவனை கடத்த முயன்றுள்ளது. அவன் அக்கும்பலிடம் இருந்து தப்பிக்க முயன்று ஓடிய நிலையில், தெருவில் ஓடஓட விரட்டிய கும்பல் சிறுவனை நடுரோட்டில் மடக்கி ஆபாசமாக திட்டியதோடு, கத்தி, தடியால் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் உடனே அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிறுவன் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது தாயார் செல்வி அளித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.