புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் விநாயக முருகன் டீ ஸ்டால் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாமுல் கேட்டு ஒரு கும்பல் கடையை சூறையாடியது.
இந்த நிலையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வணிகர் கூட்டமைப்பினர் வர்த்தக சபையினர் பல்வேறு வியாபாரி அமைப்புகள் முதலமைச்சர் சபாநாயகர் மற்றும் டிஜிபி ஆகியோரை நேரில் சந்தித்து பாதுகாப்பு கேட்டு மனு வழங்கினர்.
இதற்கிடையில், நேற்றிரவு மீண்டும் அக்கடையை மர்ம நபர் ஒருவர் அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.
இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“