மனித கால்குலேட்டர்: கணக்கு கேள்விகளுக்கு நொடிப்பொழுதில் பதில் கூறும் 12 வயது சிறுவன்

ராக் ராதி என்ற சிறுவன் 4 இலக்க எண்ணாக இருந்தாலும், அசராமல் 2 நொடிகளில் அசால்ட்டாக பெருக்கி சரியான பதிலைக் கூறி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துகிறான்.

இரண்டு இலக்க எண்களை பெருக்க வேண்டும் என்றாலே, நமக்கெல்லாம் நேரம் எவ்வளவு எடுக்கும்? ஆனால், எட்டாம் வகுப்பு படிக்கும் சிராக் ராதி என்ற சிறுவன் 4 இலக்க எண்ணாக இருந்தாலும், அசராமல் 2 நொடிகளில் அசால்ட்டாக பெருக்கி சரியான பதிலைக் கூறி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துகிறான்.

உத்தரபிரதேச மாநிலம் சாஹரான்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகன் தான் சிராக் ராதி. ஜெய் சிங் பப்ளிக் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

4-ஆம் வகுப்பு படிக்கும்போதுதான், இச்சிறுவனுக்கு கணிதத்தில் அசாத்திய திறமை இருப்பது ஆசிரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. எவ்வளவு பெரிய எண்ணாக இருந்தாலும் எளிதில் அவற்றை பெருக்கி விடைகளை கூறுகிறான் ராதி.

விஞ்ஞானியாக வேண்டும் என்பது இச்சிறுவனின் ஆசை. ஆனால், வீட்டில் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதனால், அப்பள்ளி கட்டணம் வாங்காமலேயே தன் மகனை படிக்க வைப்பதாக, அவனது தந்தை கூறுகிறார்.

எப்பாடு பட்டாவது சிராக் ராதியை பெரிய விஞ்ஞானியாக்க வேண்டும் என்பதே அவனது பெற்றோரின், ஆசிரியர்களின் கணவாக உள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close