scorecardresearch

காதலியை கொலை செய்து அதே நாளில் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்த காதலன்… டெல்லியில் மீண்டும் பயங்கரம்

டெல்லியில் காதலியை கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்த காதலன் அதே நாளில் வேறொரு பெண்னை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

காதலியை கொலை செய்து அதே நாளில் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்த காதலன்… டெல்லியில் மீண்டும் பயங்கரம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் தனது காதலியை கொன்று உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த காதலன் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நஜாப்கர் என்ற இடத்தில் உணவகம் நடத்தி வருபவர் சாஹில் கெலாட் (24). கடந்த 2018-ம் ஆண்டு இவர் டியூசன் சென்றபோது அவருக்கும், நிக்கி யாதவ் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் வெவ்வேறு இடங்களில் படிக்க சேர்ந்துள்ளனர். ஆனாலும் டெல்லியில், கிரேட்டர் நொய்டா என்ற இடத்தில் ஒரு அறையில் தங்கியுள்ளனர்.

இதில் கொரோனா காலகட்டத்தில் இருவரும் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில், ஊரடங்கு முடிந்து மீண்டும் இருவரும் ஒன்றாக ஒரே அறையில் தங்கி தங்களது படிப்பை தொடர்ந்துள்ளனர். இதனிடையே தனது குடும்பத்தினர் நடந்தி வரும் உணவகத்தை கவனித்து வநத சாஹில் கெலாட்க்கு வீட்டில் திருமணத்திற்கு பெண் பார்க்க தொடங்கியபோதும் தனது காதல் விவகாரத்தை வீட்டில் சொல்லாமல் இருந்துள்ளார்.

மேலும் வீட்டில் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்துகொள்ள சாஹில் கெலாட் முடிவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியான நிக்கி யாதவ் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 9-ந் தேதி இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட சண்டையில் ஆத்திரமடைந்த சாஹில் நிக்கி யாதவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

தொடர்ந்து அவரது உடலை தனது உணவகத்திற்கு எடுத்துச்சென்று பெரிய ப்ரிஜில் வைத்துள்ளார். அதற்கு அடுத்த நாள் (பிப்ரவரி 10) தனது வீட்டில் பார்த்த பெண்னை திருமணம் செய்துகொண்டார். இதனியே கடந்த சில நாட்களாக நிக்கி யாதவை தொடர்புகொள்ள முடியாத அவரது உறவினர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் அளித்த புகாரில் சில நாட்களாக நிக்கி யாதவை தொடர்புகொள்ள முடியவில்லை என்று, ஒருவரிடமிருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. மேலும் அவரது காதலர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் அவருக்கு ஏதோ நடந்ததாக அவர் அவர் சந்தேகிக்கிறார் ”என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார். நிக்கியின் குடும்பத்தினர் ஹரியானாவின் ஜஜ்ஜரில் வசிக்கிறது, மேலும் அவர் இருக்கும் இடத்தைப் பற்றி அவர்களுக்கும் தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து டிஜிபி சதீஷ் குமார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அதிகாரிகள் கெலாட்டின் குடும்ப வீட்டிற்கு சென்றனர் ஆனால் யாரும் அங்கு இல்லை. அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனைத் தொடர்ந்து பல சோதனைகள் நடத்தப்பட்டு இறுதியில் அவர் கைர் கிராமத்தில் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து காவல்துறையின் சிறப்பு ஆணையர் (குற்றம்) ரவீந்திர சிங் யாதவ் கூறுகையில், “அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, பிப்ரவரி 9-10 தேதிகளில் நிக்கி யாதவை கொன்றதாக கூறியுள்ளார். சாஹில் கெலாட் குடும்பத்தினது அவரை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால், நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால் இது குறித்து நிக்கி யாதவுக்குத் தெரிவிக்கவில்லை, இதனால் அவர் வழக்கம்போல் சாஹிலுடன் தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் சாஹிலின் திருமணம் குறித்து நிக்கிக்கு தெரியவந்ததால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் சிறிது நேரம் சண்டையிட்டதாகவும், பின்னர் அவர் தனது வீட்டிற்குச் சென்றதால் அவரைச் சந்திக்குமாறு நிக்கி கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது நிக்கி யாதவை சந்திக்க வந்த சாஹிலுடன் அவரது சகோதரியும் வந்துள்ளார். “அவர்கள் இரவு 11 மணியளவில் காஷ்மீர் கேட்டை அடைந்தனர், அங்கு அவர்கள் காருக்குள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சண்டையிட்டனர்.

கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு, சாஹில் டேட்டா கேபிளால் அவளை கழுத்தை நெரித்ததாகக் கூறப்படுகிறது, ”என்று ஒரு ஆதாரம் தெரிவித்துள்ளது. இதனால் நிக்கி மரணமடைந்த நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் கெலாட் “பீதியடைந்து” மணிக்கணக்கில் அந்த பகுதியில் சுற்றித் திரிந்ததாக போலீசார் தெரிவித்தனர். அதிகாலை 4-5 மணியளவில், அவர் தனது தாபாவை அடைந்து, நிக்கியின் உடலை குளிர்சாதன பெட்டியில் மறைக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் வீட்டிற்கு சென்று திருமண நிகழ்ச்சிக்கு தயாரானார். விசாரணையின் போது, அவர் தனது திருமணத்தின் காரணமாக தாபா மூடப்பட்டுவிட்டதாகவும், போலீசாரிடம் கூறினார். பின்னர் அவரிடம் இருந்து உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸாரை அழைத்துச் சென்றார். குற்றத்தின் போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய ஹூண்டாய் வெர்னா காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: A murder a plot to hide the body and a wedding same day in delhi