ஆர்.சந்திரன்

பெண்களுக்கு சம உரிமை அளிப்பது, அவர்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவது என பேசப்படும் நிலையில், இந்திய ரயில்வேயின் வடமேற்கு மண்டலத்தில் ஜெய்பூர் காந்தி நகர் என்ற ரயில்வே நிலையத்தை அனைத்து மகளிர் ரயில்வே நிலையமாக மாற்றியுள்ளனர்.

நாளொன்றுக்கு 50 ரயில்கள் வரை கடந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தில் 25 ரயில்கள் பயணிகளுக்காக நின்று செல்லும் வசதி உள்ளது. அதோடு, இந்த ரயில்வே நிலையத்தை தினமும் சுமார் 7000 பயணிகள் வரை பயன்படுத்திக் கொள்கிறார்கள் எனவும், இது தற்போது அனைத்து மகளிர் ரயில் நிலையமாக மாற்றி பெண் ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் வடமேற்கு ரயில்வே மண்டலத்தின் செய்தித் தொடர்பாளர் தருண் ஜெயின் கூறியுள்ளார்.

இந்த ரயில் நிலையத்தை ஒப்படைப்பதற்கு முன், அங்கு தேவையான அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டதாகவும், அதோடு, மகளிருக்கு தேவைப்படும் சானிட்டரி நாப்கின்களை வழங்கும் தானியங்கி இயந்திரம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளதாகவும் கூறிய தருண் ஜெயின். அந்த நிலையத்தில் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ள அனைவரும் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட திறமைசாலிகள் என்றும் கூறியுள்ளார்.

ரயில் டிக்கெட் விற்பனை, முன்பதிவுப் பணி, ரயில்களின் இயக்கம், பராமரிப்பு, நிர்வாகம், ரயில் டிக்கெட் பரிசோதனை மற்றும் ரயில்வே காவலர் பணி என அனைத்தும் சேர்த்து 28 பெண் ஊழியர்கள் கொண்டதாக, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூருக்கு அருகில் உள்ள, காந்தி நகர் ரயில் நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளது.

×Close
×Close