/indian-express-tamil/media/media_files/AUtprN8DohHojTBeLK3E.jpg)
புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி கடற்கரை பகுதி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் விற்கப்படும் ’பிங்க்’ நிற பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நிலையில் அந்தப் பஞ்சு மிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முன்னதாக, புதுச்சேரி கடற்கரை சாலை, தாவரவியல் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்தனர்.
இவற்றில் கேன்சரை உருவாக்க கூடிய விஷ தன்மை கொண்ட ரசாயனம் கலப்பு இருப்பதாக சந்தேகம் கொண்டு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அவற்றை வாங்கி சோதனை செய்தனர். அதில் ரோடமின் பி(RHODAMINE-B) என்ற விஷ நிறமி இருப்பது தெரிய வந்தது. இது ஊதுவத்தி மற்றும் தீப்பெட்டியில் வண்ணத்திற்காக பூசப்படும் தொழிற்சாலை விஷ நிறமி ஆகும்.
குறைந்த விலைக்கு கிடைப்பதினால் இதனை வடமாநில இளைஞர்கள் தெரியாமல் வாங்கி பஞ்சு மிட்டாய் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதனை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். மேலும் விற்பனை செய்த வட மாநில இளைஞர்களை பிடித்து வந்து விசாரணை நடத்தியதுடன் அவர்களில் சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய வேண்டும் எனத் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். புதுச்சேரியில் 30 வட மாநில இளைஞர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.