விரைவில் முக்கிய நகரங்களை இணைக்க 19 இருக்கைகள் கொண்ட.ஏர் சஃபா இந்தியா இலகு ரக விமான சேவை புதுச்சேரியில் தொடங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் பிராந்திய இணைப்பு திட்டமான உதான் கீழ் இந்த விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன.
இதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது, புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத், பெங்களூருக்கு விமான சேவைகள் தற்போது உள்ளன.
-
குட்டி விமானத்தை பார்வையிட்ட பேரவைத் தலைவர் செல்வம்.
இந்நிலையில் விரைவில் 19 இருக்கை கொண்ட.ஏர் சஃபா இந்தியா புதுச்சேரி மற்றும் கோவை நகரங்களில் இருந்து தொடங்கப்படுகிறது.
அதற்காக சிறிய ரக விமானம் வெள்ளிக்கிழமை (பிப்.24) புதுச்சேரி வந்தது. அந்த விமானத்தை பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.இந்த விமானங்கள் செக் குடியரசு நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/