Puducherry | புதுச்சேரி முத்தியால்பேட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த துரை கண்ணன் என்பவருக்கு ஹேமசந்திரன், ஹேமராஜன் என இரட்டை ஆண் குழந்தைகள் உண்டு.
இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகரான துரை கண்ணன், மார்க்கெட்டிங் கமிட்டி ஊழியராக உள்ளார். இவரது மனைவி முன்னாள் கவுன்சிலரான ராஜலட்சுமி ஆவார்.
இதில் 26 வயதாகும் ஹேமசந்திரன் பி.எஸ்.சி தகவல் தொழில்நுட்ப படிப்பு முடித்து விட்டு டிசைனிங் பணி செய்து வந்தார். உடல் பருமன் காரணமாக அவதிப்பட்ட இவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார்.
கடந்த 21ம் தேதி பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹேமச்சந்திரன் உடல் நிலை திடீரென மோசமடைந்தது.
இதற்கு மருத்துவரின் அலட்சியமே காரணம் என ஹேமச்சந்திரனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். மயக்க மருந்து கொடுத்ததில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஹேமச்சந்திரன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஹேமச்சந்திரன் உயிரிழந்த விவகாரத்தில், அறுவை சிகிச்சையின்போது நடந்தது என்ன, என்பது பற்றி மருத்துவர்கள் எழுத்துப்பூர்வ விளக்கம் அளித்துள்ளனர்.
முன்னதாக, பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைத்த விசாரணை குழு விசாரணை நடத்தியது.
ஹேமச்சந்திரன் உயிரிழப்புக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இரங்கல தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“