வீடு மாறிட்டீங்களா? ஆன்லைனிலேயே ஆதார் கார்டு அட்ரஸை மாத்திக்கோங்க…

How to change aadhaar address online: UIDAI போர்டலில், update your address online தேர்வு செய்யவும்.

How to change aadhaar address online

How to change aadhaar address online: ஆதார் எண், இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு இன்றியமையாததாக மாறியுள்ளது.

வங்கிக்கணக்கு துவங்குதல், மொபைல் போன் சிம் பெறுதல், அரசின் சில மானியங்களை பெறுதல் உள்ளிட்ட சேவைகளுக்கு ஆதார் எண் அவசியமாகிறது.

ஆதார் எண், UIDAI or Unique Identification Authority of India என்ற அமைப்பால் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஆதார் எண் பெற்றவர்கள் வீடு அல்லது ஊர் மாறினாலோ, அவர்கள், ஆதார் கார்டிலும், முகவரி மாற்றம் செய்ய வேண்டியது அவசியம். இதற்காக, அவர்கள் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. UIDAI or Unique Identification Authority of India இணையதளத்திற்கு சென்றோ அல்லது ஆதார் சேவை மையத்திற்கு சென்றோ, நாம் முகவரி மாற்றத்தை செய்துவிடலாம்.

இணையதளத்தில் மாற்ற விரும்புபவர்கள், மாற்ற வேண்டிய முகவரிக்கான ஆதாரங்களான பாஸ்போர்ட், பேங்க் பாஸ்புக், டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ் பாலிசி, பதிவு சான்றிதழ், எெலெக்ட்ரிசிட்டி பில், வாட்டர் பில், லேண்ட்லைன் பில், கிரெடிட் கார்டு ஸ்டேட்மெண்ட், கேஸ் கனெக்சன் பில் உள்ளிட்டவைகள் முகவரிக்கான ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ளப்படும்.

How to change aadhaar address online

இவைகள் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளாக தயார்நிலையில் வைத்துக்கொண்டு UIDAI or Unique Identification Authority of India இணையதளத்திற்கு சென்ற கீழ்கண்ட வழிமுறைகளை ஒன்றன்பின் ஒன்றாக செய்தால் எளிதாக ஆன்லைனிலேயே முகவரி மாற்றத்தை செய்துவிடலாம்.

1. UIDAI போர்டலில், update your address online தேர்வு செய்யவும்.

2. அடுத்து வரும் login பக்கத்தை, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு வரும் one time passwordயை கொண்டு login செய்யவும்.

3. அதன்பின் வரும் பக்கத்தில், update address via address proof தேர்வு செய்யவும்.

4. அடுத்து வரும் பக்கத்தில்,பெயர், முழு முகவரி உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்யவும்.

5. இந்த விபரங்கள் சரிபார்த்தபின்னர், ,ஸ்கேன் செய்து தயாராக வைத்துள்ள பிரதிகளை அப்லோட் செய்யவும்.

தாங்கள் செய்த மாற்றங்கள், ஆதார் டேட்டாபேஸில் சரிசெய்யப்பட்ட பிறகு, குறுந்தகவல் மூலம் தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்

ஆதார் சேவை மையத்தில் ரூ.50 செலுத்தி, உரிய ஆவணங்களை சமர்ப்பித்தும் ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்யலாம்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aadhaar card address change online

Next Story
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் – தாக்குதலின் பின்னணியில் மோடி : ஆம் ஆத்மிDelhi CM Arvind Kejriwal
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com