ஆதார் கார்டில் வீட்டு முகவரி மாற்ற வேண்டுமா? இதை தாங்கள் செய்தாலே போதும்...

ஆதாரில் இருக்கும் தகவல்கள் மிகவும் சரியாக இருப்பது முக்கியமாகும். ஏனெனில் அது வருமான வரி கணக்குத் தாக்கல் போன்றவற்றுக்கும் மிகவும் அவசியம்.

பாஸ்போர்ட், வங்கி கணக்கு துவக்கம் உள்ளிட்ட சேவைகளை பெற மிகவும் முக்கியமான ஒன்றாக ஆதார் அட்டை உள்ளது.
ஆதாரில் இருக்கும் தகவல்கள் மிகவும் சரியாக இருப்பது முக்கியமாகும். ஏனெனில் அது வருமான வரி கணக்குத் தாக்கல் போன்றவற்றுக்கும் மிகவும் அவசியம்.

ஒருவருடைய ஆதார் அட்டையில் பெயர், வயது, பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட எதிலேனும் தவறுகள் இருப்பின் அவற்றை எளிதில் சரி செய்துகொள்ள முடியும். சிலவற்றை இணையத்திலேயே சரிசெய்யும் வசதியை அதிகாரப்பூர்வ இணையதளம் UIDAI செய்துள்ளது.
இந்த இணையதளத்தில் ஆதார் அப்டேட் என்ற ஆப்ஷன் இடம் பெற்றிருக்கும். அதில் லாக்இன் செய்து பின்னர் முகவரியில் இருக்கும் தகவல்களை சரி செய்வதோடு, முகவரியை மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் செய்யலாம். மேலும் வேறு தகவல்களில் பிழை இருப்பின் அவற்றை அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கு சென்று சரி செய்யலாம்.

How to Update Aadhaar Card Address Online:இதனை எப்படி செய்வது ?

படி 1: உங்கள் ஆதார் அட்டையின் எண்ணை பயன்படுத்தி, ஆதார் அட்டை ஆன்லைன் தளமான //uidai.gov.in/ செல்ல வேண்டும்.
படி 2: நீங்கள் மாற்றம் செய்ய விரும்பும் விவரத்தை, பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றில் இருந்து தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்.
படி 3: நீங்கள் திருத்தம் செய்ய அல்லது மாற்றம் செய்ய விரும்பும் விவரங்களைக் கொண்ட அடையாள ஆவணத்தை ஸ்கேன் செய்து, சொந்த கையெழுத்திட்ட நகலுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
படி 4: பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, மொபைல் நம்பர் அல்லது மின்னஞ்சல் ஐடி ஆகியவை தொடர்புடைய மாற்றம் செய்ய வேண்டிய அல்லது திருத்தம் செய்ய வேண்டிய கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, ஆதார் அட்டையின் புதுப்பிப்பு விண்ணப்பத்திற்கான எண் அளிக்கப்படும்.
இந்த எண் மூலம் நீங்கள் செய்ய விண்ணப்பித்த மாற்றம் அல்லது திருத்தம், எந்த நிலையில் உள்ளது என்பதை கண்காணிக்க பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆதார் அட்டை தொடர்பான புதுப்பிப்புகளைச் செய்ய 90 நாட்கள் வரையிலான காலஅளவை எடுத்து கொள்ளலாம் என்று UIDAI இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close