தடுப்பூசி வசதியைப் பெற கோவின் போர்ட்டலில் பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் இதை பின்பற்றுமாறு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக் கொண்டது.
கோவின் போர்ட்டலில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆதார் அட்டை வலியுறுத்தப்படுவதாக, தொடர்ந்த வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் டிஒய் சந்திரசூட், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
“அக்டோபர் 1, 2021 தேதியிட்ட இந்த நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்’ கோவின் போர்ட்டலில் பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை என்றும், ஒன்பது அடையாள ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பிக்கலாம் என்றும் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
சிறை கைதிகள், மனநல காப்பகங்களில் உள்ள கைதிகள் போன்ற அடையாள அட்டைகள் இல்லாத பிற வகை நபர்களுக்கு வேறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் பிரமாணப் பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று அமர்வு சுட்டிக்காட்டியது.
ஒன்பது அடையாள ஆவணங்களில் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு ஆகியவை அடங்கும். இந்த வழக்கில்’ மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அடையாள அட்டை இல்லாத சுமார் 87 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள ஆவணத்தை சமர்பித்ததாக நீதிமன்றம் தெரிவித்தது.
எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், “ஆதார் அட்டையை சமர்ப்பிக்காததால் தடுப்பூசி மறுக்கப்பட்டது என்ற மனுதாரரின் குறை, பிரமாணப் பத்திரத்தில் தீர்க்கப்பட்டுள்ளதாக கூறியது.
மேலும் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் ஐடியை’ அளித்தும் மனுதாரருக்கு தடுப்பூசி போட மறுத்த தனியார் தடுப்பூசி மையம் மீது நடவடிக்கை எடுக்குமாறு, மகாராஷ்டிராவில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு’ சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் அரசின் கொள்கையின்படி செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.
ஆதாரை வலியுறுத்துவது அரசியலமைப்பின் 21 மற்றும் பிரிவு 14 இன் கீழ் அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதாரர் வாதிட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் இவ்வாறு பதிலளித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “